Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாஸ்து: வீடு கட்ட பஞ்சபூதங்களின் அமைப்பு அவசியமா...?

Webdunia
வீட்டுக்கு அஸ்திவாரமும், வாசலும் எப்படி முக்கியமோ, அதேபோல் பஞ்சபூதங்கள் அமைப்பும் சரியானபடி அமைய வேண்டும். அப்படி அமைந்த வீடுகள் எனில் செல்வச் செழிப்பில் உயர்ந்து நிற்கும் என்பது மறுக்கமுடியாத உண்மை.

எந்த விஷயம் செய்தாலும் நன்கு கவனித்து பாருங்கள் அதில்  பஞ்சபூதங்கள் கண்டிப்பாக இடம் பெற்று இருக்கும். நீர், நிலம், காற்று, நெருப்பு, வானம் என்ற  பஞ்சபூதங்களின் செயல் அந்த நிகழ்வை மிக நல்லவையாக மாற்றி விடும். இப்படி பஞ்ச பூதங்கள் ஒருங்கே அமைந்து இருந்தால் அங்கு நன்மைகள் மட்டுமே உயர்ந்து நிற்கும். பஞ்சபூதங்களின் ஆட்சியை எப்படி அறிவது. நமக்கு நன்மை நடப்பதை எப்படி உணர்வது.
 
பஞ்சபூதங்களின் ஆட்சியை வீட்டிலும், தொழில் நிறுவனத்திலும் சரியாக அமைத்து கொடுப்பது வாஸ்து மட்டுமே. இந்த வாஸ்துவால் மிகுந்த நன்மைகள்  ஏற்படுகின்றன.
 
பரிபூரணமாக வாஸ்து பார்த்து கட்டப்பட் வீடுகளில் பேரமைதி தவழும். அங்கு வசிப்பவர்கள் முகங்கள் எப்போதும் புன்னகை தவழும் முகங்களாக காணப்படும். எவ்வளவு பெரிய பிரச்னைகளாக இருந்தாலும் இவர்களுக்கு எளிதாக நல்லவையாக மாறிவிடும். காரணம் அவர்களின் வீடுகளில் ஆட்சிப்புரியும் பஞ்சப்பூதங்களின்  செயல்பாடுதான். இதை சிறப்பாக செய்து கொடுத்தது வாஸ்துதான்.
 
இப்படிதான் தொழில் நிறுவனங்களில் உள்ள தடைகளை நீக்கி லாபம் பெற செய்வதில் வாஸ்துவின் பங்கு மிக முக்கியமாக உள்ளது. வாஸ்து பார்க்கப்பட்ட தொழில் நிறுவனங்கள் இன்று லாபகரமாக இயங்கி வருவதே இதற்கு நேரிடையான கண்கூடான சாட்சியாகும். வாஸ்து தீமைகளின் பாதிப்புகளை குறைத்து நன்மைகளை ஏற்படுத்தி வாழ்வில் வளம் சேர்க்க உதவுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments