இந்திய பேட்மிட்டன் இரட்டையர் பிரிவில் முன்னனி வீரங்கனையாக வலம் வருபரான ஜுவாலா கட்டா பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
இந்நிலையில் தன் டிவிட்டர் பக்கத்தில் அவர் அடுக்கான பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது:
'கடந்த 2006ஆம் ஆண்டு இந்திய பாட்மிட்டன் தலைமை பதவியை அவர் ஏற்ற பிறகு நான் தேசிய அணியில் இடம் பிடித்து பிடிக்காமல் அவர் என்னை அணியில் இருந்து நீக்கினார்.
நான் அப்போது நல்ல பார்ம்மில் தான் இருந்தேன்.இருந்தபோதிலும் என்னை 2016 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற பிறகும் பழையபடி என்னை அணியிலிருந்து காரணமே இல்லாமல் நீக்கினார்.
அணித்தேர்வில் அவர் அதிகம் பாகுபாடு காட்டியது எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது என்று ஜுவாலா கட்டா தன் மனம் திறந்து கூறியுள்ளார்.'
கடந்த 2006 ஆம் ஆண்டிலிருந்து பேட்மிட்டன் பயிற்சியாளராக இருந்தவர் கோபிசந்த் ஆவார். ஜுவாலவின் குற்றச்சாட்டுக்க்கு அவர் என்ன பதி கூறப்போகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்துள்ளனர்.