Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவாரூரில் போட்டியிட ஸ்டாலின் விரும்பவில்லை: திடீர் திருப்பத்திற்கு காரணம் என்ன?

Webdunia
வியாழன், 3 ஜனவரி 2019 (22:56 IST)
திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளராக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தான் என்று திமுக வட்டாரங்கள் கூறி வரும் நிலையில் திடீர் திருப்பமாக திருவாரூர் இடைத்தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிட சாத்தியக்கூறு இல்லை என பூண்டி கலைவாணன் பேட்டி அளித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவாரூரில் போட்டியிட ஸ்டாலின் விரும்பவில்லை என்றும் இருப்பினும் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட விரும்பி அவரது ரசிகர் மன்றத்தினர் பெயரில் விருப்ப மனு தரப்பட்டுள்ளதால் அவரது பெயர் பரிசீலனை இருக்க வாய்ப்பு உள்ளது என்றும் பூண்டி கலைவாணன் மேலும் தெரிவித்தார்.

திமுக சார்பில் யார் போட்டியிட்டாலும் வெற்றி பெறுவார்கள் என்றும், திருவாரூர் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

திருவாரூர் தேர்தலில் வெற்றி பெற்றால் பின் மீண்டும் கொளத்தூர் தொகுதியில் இடைத்தேர்தலை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அதனால் ஸ்டாலின் போட்டியிட விரும்பவில்லை என்றும் திமுக வட்டாரங்கள் கூறுகின்றன. அதே நேரத்தில் தான் போட்டியிட்டால் அதிமுக, அமமுகவும் கைகோர்க்க ஒரு வாய்ப்பாக அமைந்துவிடும் என்றும் ஸ்டாலின் கருதுவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜனவரி 17ஆம் தேதியும் விடுமுறை: தமிழக அரசின் அறிவிப்பால் பொதுமக்கள் மகிழ்ச்சி..!

தக்காளி விலை படுவீழ்ச்சி.. 50 ரூபாய்க்கு 4 கிலோ.. இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..!

700 பெண்களின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்.. அமெரிக்க மாடல் எனக் கூறியவர் கைது..!

கதிர் ஆனந்த் கல்லூரியில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு.. கைப்பற்றப்பட்ட பொருள்கள் என்ன?

தாம்பரம் - கடற்கரை இடையே புறநகர் ரயில் சேவை ரத்து: என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments