வெளியானது சாமி ஸ்கொயர் படத்தின் மொஷன் போஸ்டர்

Webdunia
வியாழன், 17 மே 2018 (18:36 IST)
ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் சாமி ஸ்கொயர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
 
விக்ரம், த்ரிஷா நடிப்பில், ஹரி இயக்கத்தில் 2003ஆம் ஆண்டு ரிலீஸான படம் ‘சாமி’. சூப்பர் ஹிட்டான இந்தப் படத்தின் இரண்டாம் பாகம், ‘சாமி ஸ்கொயர்’ என்ற பெயரில் தயாராகி வருகிறது. கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தில், பாபி சிம்ஹா வில்லனாக நடித்து வருகிறார்.
 
மேலும், பிரபு, ஜான் விஜய், ஓ.கே.சுந்தர், சூரி, சஞ்சீவ், இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ் கான் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். காரைக்குடி மற்றும் திருநெல்வேலியில் இதன் ஷூட்டிங் நடைபெற்றது. தற்போது வரை 80 சதவீதம் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்க சேர்ந்துட்டோம்!.. அண்ணன் தம்பியா செயல்படுவோம்!.. டிடிவி தினகரன் ஃபீலிங்...

டிடிவி தினகரன் கூட சேர்ந்ததில் எந்த சங்கடமும் இல்லை!.. பழனிச்சாமி விளக்கம்!...

வங்கி வேலை நிறுத்தம் அறிவிப்பு!.. 3 நாட்களுக்கு வங்கி சேவை பாதிக்கும்!...

ஷிம்ஜிதா எடுத்த 7 வீடியோ!.. ஜாமின் வழங்க போலீஸ் எதிர்ப்பு!...

திமுக அரசு ஒரு Trouble Engine!.. ஸ்டாலின் கமெண்ட்டுக்கு தமிழிசை பதிலடி!...

அடுத்த கட்டுரையில்
Show comments