Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டெர்லைட் ஆலை மின் இணைப்பு துண்டிப்பு: நிரந்தரமாக மூடப்படுமா?

Webdunia
வியாழன், 24 மே 2018 (09:19 IST)
தூத்துகுடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்த போராட்டத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையின் ஆலையின் உரிமத்தை புதுப்பிக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஏற்கனவே மறுத்துவிட்ட நிலையில் தற்போது ஸ்டெர்லைட் ஆலைக்கான மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
 
ஸ்டெர்லைட் ஆலையின் சிடிஓ அனுமதியை புதுப்பிக்க ஏற்கெனவே வாரியம் மறுத்த நிலையில் மே18 மற்றும் 19ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்குள் வாரிய அதிகாரிகள் நடத்திய ஆய்வில் ஆலை உற்பத்தியை மீண்டும் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் கண்டறியப்பட்டதால் மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
 
இந்த நடவடிக்கை காரணமாக ஸ்டெர்லைட் ஆலை இனிமேல் தூத்துகுடியில் இயங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைவர் பதவியை இழக்கும் அண்ணாமலை!? அடுத்த தலைவர் அந்த நடிகரா?

டெல்லியில் பளார் பளார் என அறை வாங்கிய அண்ணாமலை: அமைச்சர் சேகர்பாபு

2 ரயில்கள் நேருக்கு மோதி பெரும் விபத்து.. இரு ரயில்களின் டிரைவர்களும் பலி..!

குரூப் 1, 1ஏ தேர்வுகள் எப்போது? டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments