Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விபத்தில் முதல்வரானவருக்கு எதற்கு வீராப்பு; எடப்பாடியை சரமாரியாக சாடிய துரைமுருகன்

Webdunia
புதன், 20 ஜூன் 2018 (16:37 IST)
காவிரி விவகாரத்தில் அதிமுக கட்சிதான் சாதித்தது என்று திமுகவை குறைக்கூறி பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை திமுகவின் முதன்மை செயலாளர் துரைமுருகன் சரமாரியாக தாக்கியுள்ளார்.


காவிரி நதி நீர் மீட்பு போராட்டத்தின் வெற்றி விழா நாகப்பட்டினத்தில் நடைப்பெற்றது. அதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு பேசினார். காவிரி விவகாரத்தில் அதிமுக கட்சிதான் போராடி தமிழகத்திற்கு உரிமை பெற்று தந்துள்ளது என்றும், திமுக துரோகம் செய்துவிட்டது என்று கூறினார்.
 
இதனால் அதிருப்தி அடைந்த திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
 
காவிரி வரைவு திட்டம் உச்சநீதிமன்றத்தில் இறுதி செய்யப்பட்டு ஜூன் 1ஆம் தேதிக்குள் காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றமே உத்தரவிட்டது. ஆணையமே அமைக்காமல் காவிரி பிரச்சனையில் சாதித்து விட்டோம் என்று முதலமைச்சர் பொய் பேசுகிறார்.
 
ஒரு ஸ்டாலினை சட்டமன்றத்தில் பேச விடுவதற்கே அஞ்சி நடுங்கி நிற்கும் நீங்கள், ஆயிரம் ஸ்டாலின்கள் வந்தால் அதிமுக அரசு வங்காள விரிகுடா கடலில்தான் கிடக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
 
ஏதோ விபத்தில் முதலமைச்சரான பழனிசாமி வீராப்பு பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அது மட்டுமல்ல காவிரி பிரச்சினையில் சாதித்தது தி.மு.க.வா? அல்லது அ.தி.மு.க.வா? என்று விவாதம் நடத்த விரும்பினால் நான் அதற்கு ரெடியாக இருக்கிறேன். ஒரே மேடையில் காவிரி பற்றி விவாதிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தயாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. திருப்பதி சம்பவம் குறித்து ரோஜா..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா? திமுக vs நாதக?

அடுத்த கட்டுரையில்
Show comments