Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகார்த்திகேயனை டுவிட்டரில் பின்தொடர்வோர் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

Webdunia
திங்கள், 28 மே 2018 (15:31 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவரான நடிகர் சிவகார்த்திகேயனை டுவிட்டரில் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து வெகு சீக்கிரத்தில் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் சிவகார்த்திகேயன். தமிழ்  சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் சிவகார்த்திகேயனை டுவிட்டரில் பின்தொடர்வோர் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.  தற்போது வரை சிவகார்த்திகேயனை சுமார் 50 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். 
 
சிவகார்த்திகேயன் – பொன்ராம் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகிவரும்சீம ராஜா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. படத்தை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
 
சிவகார்த்திகேயன் அடுத்ததாக ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்திலும், எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க உள்ளதாக தகவல்கள்  தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவை பாத்து காப்பியடிக்காதீங்க விஜய்?? மோடி குறித்த பேச்சுக்கு சரத்குமார் அட்வைஸ்!

இனிமேல் பாஜக கூட்டணியில் இருந்து விலக மாட்டேன்.. அமித்ஷாவிடம் உறுதியளித்த பீகார் முதல்வர்..!

பெண்கள் பெயரில் சொத்து வாங்கினால் 1% கட்டணம் குறைவு.. தமிழக அரசு அரசாணை..!

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments