Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் திடீர் லண்டன் பயணம்

Webdunia
செவ்வாய், 10 ஜூலை 2018 (07:26 IST)
தி.மு.க. செயல் தலைவரும் தமிழக சட்டமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்றிரவு சென்னையில் இருந்து லண்டனுக்கு புறப்பட்டுச் சென்றார். அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக லண்டன் செல்வதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன
 
மு.க.ஸ்டாலின் அவ்வப்போது அமெரிக்கா மற்றும் லண்டனுக்கு மருத்துவ பரிசோதனைக்கு செல்வதாக கூறப்படும் நிலையில் நேற்று லண்டன் கிளம்பி சென்றார். அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் சென்றுள்ளார். 
 
லண்டனில் மு.க.ஸ்டாலின் சுமார் ஒருவார காலம் தங்கியிருந்து அதன்பின்னர் சென்னை திரும்புவார் என்று திமுக வட்டாரங்கள் கூறுகின்றன. சென்னை விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலிடம், 'தமிழகத்திற்கு பல திட்டங்களை மத்திய அரசு தந்துள்ளதாக அமித்ஷா பேசியிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு ‘நான் அவர் பேசியதை பார்க்கவில்லை’ என கூறினார்.
 
மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பியவுடன் திமுகவில் இன்னும் பல களையெடுப்புகள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.. தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

5 ஆண்டுகளாக 60 பேர் பாலியல் வன்கொடுமை.. 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை..!

மீண்டும் உச்சம் செல்லும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 240 ரூபாய் உயர்வு..!

எக்கமா.. எக்கச்சக்கமா..! பொங்கலையொட்டி விண்ணை தொட்ட விமான டிக்கெட் விலை!

ஆட்டோ கட்டணம் உயர்வு.. தொழிற்சங்கத்தினர் அறிவிப்பை தமிழக அரசு ஆதரிக்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments