Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்பட்டார் தீபக் மிஸ்ரா! ஓய்வுபெற்ற நீதிபதி திடுக் புகார்

Webdunia
செவ்வாய், 4 டிசம்பர் 2018 (09:33 IST)
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ரா ஓய்வு பெறுவதற்கு சில நாட்களுக்கு முன் சபரிமலை, ஓரினச்சேர்க்கை, கள்ளக்காதல் உள்ளிட்ட ஒருசில வழக்குகளின் தீர்ப்புகளை வழங்கினார். இந்த தீர்ப்புகள் இன்று வரை விவாத பொருளாகவே இருந்து வருகிறது.

இந்த நிலையில் நீதிபதி தீபக்மிஸ்ரா வெளியில் இருந்த வந்த ஒரு சக்திமிக்க ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்பட்டார் என இன்னொரு ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியான குரியன் ஜோசப் புகார் ஒன்றை கூறியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தீபக் மிஸ்ராவை கட்டுப்படுத்திய சக்தி எது என்று குரியன் ஜோசப் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

நீதிபதி குரியன் ஜோசப் உள்ளிட்ட நான்கு நீதிபதிகள் ஏற்கனவே தீபக் மிஸ்ரா மீது பத்திரிகையாளர்கள் முன் கடந்த ஜனவரி மாதம் பாரபட்சமாக வழக்குகளை ஒதுக்குவதாக பரபரப்பு புகார்களை கூறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குரியன் ஜோசப் கூறிய இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை தேவை என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் சிங்வி இதுகுறித்து கூறுகையில், நீதித்துறையில் வெளிப்புறச் சக்தியின் தாக்கம், பாதிப்பு இருந்தது என்பதையும், ரிமோட் கன்ட்ரோல் மூலம் நிர்வாகம் இருந்தது என்பதும் உறுதியாகிவிட்டதாகவும் இதுகுறித்து உடனடி விசாரணை தேவை என்றும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் வன்கொடுமை, கொலை செய்பவர்களுக்கு மரண தண்டனை: டொனால்ட் டிரம்ப்..!

சபரிமலையில் நாளை மண்டல பூஜை: பக்தர்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்..!

இன்று வலுவிழக்கிறது காற்றழுத்த தாழ்வு பகுதி ; தென் மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை..!

தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்ள தயார்: டி.டி.வி.தினகரன் அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments