Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எனக்கு அந்த அளவுக்கு பெருந்தன்மை இல்ல... சிம்பு குறித்து தனுஷ் பேச்சு

Webdunia
புதன், 10 அக்டோபர் 2018 (16:03 IST)
வெற்றி மாறன் - தனுஷ் வெற்றிக் கூட்டணியின் 3 வது முறையாக இணைந்துள்ள படம்`வடசென்னை’. இதில் தனுஷ்க்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். இவர்களுடன் ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, கருணாஸ், கிஷோர், ராதாரவி, சீனு மோகன் என பெரும் பட்டாளமே நடித்துள்ளது.

இந்நிலையில் வட சென்னை படக்குழு  இன்று செய்தியாளர்களை சந்தித்தது. இதில் தனுஷ், வெற்றி மாறன், அமீர், சந்தோஷ் நாராயணன், ஆண்ட்ரியா உள்ளிட்டவர்கள்
இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய தனுஷ், ``வடசென்னை கதையை வெற்றி மாறன் பல வருடங்களுக்கு முன்பே உருவாக்கி விட்டார்.  உருவாக்கி வருகிறார்கள். அப்போது இந்த கதையை செய்ய
சரியாக மார்க்கெட் இல்லை.  அதனால் தான் ஆடுகளம் கதையை செய்தோம். ஒரு இடைவேளைக்கு பின்பு இந்த கதையை செய்ய முடிவு செஞ்சோம். ஆனால்  வெற்றி மாறன் ஒருநாள் `வடசென்னை' படத்தை சிம்புவை வைத்துப் பண்ணலாம் என்று இருக்கேன்னு சொன்னார். நான் இப்போ படத்துல பண்ணிருக்க அன்பு கேரக்டரை சிம்பு பண்றதாகவும், படத்துல குமார்னு ஒரு பவர்ஃபுல் கேரக்டர் வருது, அத என்னைப் பண்ணச் சொல்லி கேட்டாங்க. நான் சொன்னேன், சார் எனக்குக் கொஞ்சம் பெருந்தன்மை இருக்கு. ஆனா அவ்ளோ பெருந்தன்மை எல்லாம் இல்ல. தப்பா எடுத்துக்காதீங்க. எனக்கு இதுல உடன்பாடு இல்லைனு சொல்லிட்டேன்.  அப்புறம் சில வருடங்கள் கழித்து  மறுமடியும் என்கிட்டே `வடசென்னை' வந்திச்சு. இதுல வெட்கப்பட ஒண்ணுமே இல்ல. காரணம், வடசென்னை  படம் எனக்கு மிக முக்கியமான படமா இருக்கும்” என்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பத்மஸ்ரீ விருது பெற்ற விஞ்ஞானி மர்ம மரணம்.. ஆற்றில் கிடந்த பிணம்..!

பிரதமர் மோடி எடுத்த முடிவு புத்திசாலித்தனமானது: ப சிதம்பரம் பாராட்டு..!

பாகிஸ்தானுக்குள் நுழைந்து அட்டாக் செய்த இந்திய ராணுவத்திற்கு வாழ்த்துக்கள்: ரஜினிகாந்த்

சென்னையில் திடீரென மேகமூட்டம்.. இன்று முதல் இடி மின்னலுடன் மழை பெய்யும் பகுதிகள்..!

ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை.. இந்திய விமானப்படை அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments