தீபாவளிக்கு முன்பே... சர்கார்! காரணம் இதுவா?

Webdunia
புதன், 24 அக்டோபர் 2018 (16:37 IST)
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், தளபதி விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி நடித்துள்ள சர்கார் படத்தை சன்பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார்.

இந்தப் படம் நவம்பர் 6ம் தேதி தீபாவளிக்கு வெளிவருதாக அறிவித்து இருந்தார்கள். ஆனால் தற்போது  தீபாவளிக்கு முன்னதாகவே நவம்பர் 2ம் தேதி வெளிவரும் என்று தெரிகிறது.
 
இந்த ஆண்டு தீபாவளி நவம்பர் 6-ம் தேதி செவ்வாய்கிழமை வருகிறது. செவ்வாய் கிழமையில் படத்தை வெளியிட பொதுவாக யாரும் விரும்ப மாட்டார்கள். அதனால் அதற்கு முந்தைய வெள்ளிக்கிழமையான நவம்பர் 2-ம் தேதியே படத்தை வெளியிட தயாரிப்பு தரப்பு முடிவு  செய்திருக்கிறதாம். 
 
ஏனெனில் 2ம் தேதி வெளியிடப்பட்டால் வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் நல்ல ஓப்பனிங் இருக்கும். அதற்கடுத்து இருப்பது ஒரே ஒரு திங்கட்கிழமை, அதை தாண்டிவிட்டால் மறுநாள் தீபாவளி அதைத் தொடர்ந்து அந்த வாரம் முழுமைக்கும் படத்தை ஓட்டி 10 நாள்களில்   கல்லா கட்டிவிடலாம். இதனால் நவம்பர் 2, ம்தேதி  சர்கார் படம் வெளியாகும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரீன்லாந்தை கைப்பற்ற நினைத்தால் விபரீதம் ஏற்படும்.. ட்ரம்ப்க்கு டென்மார்க் எச்சரிக்கை...

ஜனவரியில் நல்ல மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

திமுக கூட்டணிக்கு செல்கிறதா தேமுதிக? இரட்டை இலக்கங்களில் தொகுதிகள்?

மோடியால் பாஜகவுக்கு ஆபத்து.. பகீர் கிளப்பிய சுப்பிரமணியன் சுவாமி!

விஜய்க்கு சிபிஐ சம்மன்!.. போனாலும் பிரச்சனை... போகலானாலும் பிரச்சனை.. தளபதி சமாளிப்பாரா?!...

அடுத்த கட்டுரையில்
Show comments