Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலா டிக்கெட்டை காண்பித்தால் பாதி விலையில் சோறு: சென்னையில் சலுகை

Webdunia
புதன், 6 ஜூன் 2018 (17:08 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' படத்திற்கு எதிர்பார்ப்புக்கும் அதிகமாகவே எதிர்ப்பு ஏற்பட்டு வருகிறது. இருப்பினும் இந்த படத்திற்கான ஆதரவும் பெருகி வருவதே ரஜினிகாந்த் என்ற காந்தத்தின் மாயமாக கருதப்படுகிறது.
 
இந்த நிலையில் 'காலா' படத்தின் பெயரை வைத்து பலர் தங்கள் வியாபாரத்தை பெருக்கும் திட்டத்தையும் கொண்டு வந்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் சென்னையில் உள்ள ஒரு பிரபல ஸ்டார் ஓட்டல், காலா' படத்தின் டிக்கெட்டை காண்பித்தால் அவர்கள் வாங்கும் உணவுப்பொருட்களின் விலையில் 50% சலுகை என்று அறிவித்துள்ளது. இந்த சலுகை வரும் 20ஆம் தேதி வரை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதேபோல் இன்னும் ஒருசிலரும் 'காலா'வை வைத்து விளம்பரம் செய்ய முடிவு செய்திருப்பதாகவும் இதுகுறித்த அறிவிப்பு இன்னும் ஒருசில மணி நேரங்களில் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments