Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை குஷ்பு மீது போலீசார் திடீர் வழக்கு

நடிகை குஷ்பு மீது போலீசார் திடீர் வழக்கு

Webdunia
புதன், 4 மே 2016 (07:22 IST)
அனுமதியின்றி தேர்தல் பிரச்சாரம் செய்த, நடிகையும், அகில இந்திய காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பளருமான  குஷ்பு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
 

 
கன்னியாகுமரி மாவட்டத்தில், காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, நடிகையும், அகில இந்திய காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பளருமான குஷ்பு தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
 
அப்போது, கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ்குமார் மற்றும் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜயதாரணியை ஆதரித்து பல்வேறு பகுதிகளில் வாக்கு ச்சேகரித்தார்.
 
இந்த நிலையில், குழித்துறை பகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்ய நடிகை குஷ்பு முறையாக அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது.
 
இது குறித்து விளவங்கோடு தேர்தல் பார்வையாளர் டேவிட் ஜெபசிங் களியக்காவிளை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் நடிகை குஷ்பு, விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜயதாரணி ஆகியோர் மீது , போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவபெருமான் நெற்றிக்கண்ணை திறந்துவிட்டார்.. திருவண்ணாமலை நிலச்சரிவு குறித்து சித்தர்..!

ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில்.. ரெய்டு சென்ற போலீஸ் அதிகாரி படுகாயம்..!

இளைஞரின் செல்போனை திருடிய குரங்கு.. கால் அட்டெண்ட் செய்து பேசியதா?

இன்று இரவுக்குள் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! - வானிலை அலெர்ட்!

வங்கி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு: பெண் தொழிலதிபருக்கு மரண தண்டனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments