Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒட்டு கேட்க வந்த வேட்பாளரை ஓட வைத்த பொதுமக்கள்

Webdunia
வெள்ளி, 6 மே 2016 (12:36 IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் ஓட்டு சேகரிக்க வந்த திமுக வேட்பாளரை, பொதுமக்கள் முற்றுகையிட்டு திருப்பி அனுப்பிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


 

 
திருநெல்வேலி மாவட்டம் இளங்கோவன் நகர் பகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டிபிஎம் மைதீன்கான், வாக்கு சேகரிப்பதற்காக அந்த பகுதிக்கு வந்தார். 
 
அப்போது அங்கு வந்த பொதுமக்கள், ஐந்து வருடங்களாக இந்த பகுதிக்கு எந்த அடிப்படை வசதிகளும் செய்து தராமல், ஓட்டு கேட்க ஏன் வந்தீர்கள்? என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவரை ஊருக்குள் விடாமல் திருப்பி அனுப்பினர்.
 
கடந்த இரண்டு முறையும் அந்த தொகுதியில் வெற்றி பெற்று, பத்து வருடங்களில் இரண்டு முறை மட்டுமே அவர் தொகுதி பக்கம் வந்ததாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
 
ஓட்டு கேட்டு வரும் வேட்பாளர்களை பொதுமக்கள் முற்றுகையிட்டு திருப்பி அனுப்பும் செயல் அதிகரித்து வருவது அரசியல் தலைவர்களுக்கிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசம் - பாகிஸ்தான் இடையே நடந்த முதல் நேரடி பரிமாற்றம் - இந்தியாவுக்கு என்ன பிரச்னை?

நடிகை கஸ்தூரிக்கு நவம்பர் 29 வரை நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு..!

விஜய் போட்டியிடும் தொகுதி இதுவா? தவெக தர்மபுரி மாவட்ட தலைவர் சிவா தகவல்

தலைமறைவாகவில்லை, படப்பிடிப்பில் தான் இருந்தேன்: கஸ்தூரி விளக்கம்.!

எலான் மஸ்க்கை கெட்ட வார்த்தையில் அபிஷேகம் செய்த அதிபரின் மனைவி! - எலான் மஸ்க்கின் ரியாக்‌ஷன் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments