Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவு இல்லை : நடிகர் விஜய் அறிவிப்பு

எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவு இல்லை : நடிகர் விஜய் அறிவிப்பு
, திங்கள், 9 மே 2016 (18:39 IST)
நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலில், எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று நடிகர் விஜய் தரப்பிலிருந்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.


 

 
நடிகர் விஜய் தனது ரசிகர்களை திமுகவிற்கு ஆதராக செயல்பட வைப்பதாக தகவல்கள் வெளியானது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில் அவர் தரப்பிலிருந்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அகில இந்திய இளைய தளபதி விஜய் தலைமை நற்பணி மன்ற இயக்கத்தின் பொறுப்பாளர் புல்ஸி என்.ஆனந்து வெளியிட்டுள்ள அறிக்கையில்:
 
வருகின்ற 2016 சட்டமன்ற தேர்தலில் ‘இளையதளபதி விஜய் மக்கள் இயக்கம்' நடுநிலையை வகிக்க முடிவு செய்துள்ளது. அதாவது, எந்தக்கட்சிக்கும் நாம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவு அளிக்கவில்லை.

அதே சமயம் இளையதளபதி ரசிகர்கள் தங்கள் விருப்பத்திற்கு தகுந்தாற்போல, தாங்கள் விரும்பும் கட்சிக்கு வாக்களிக்கலாம். ஆனால் இளையதளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ, கொடியையோ பயன்படுத்தக்கூடாது. இந்த நிலைபாட்டை நான் மக்கள் இயக்க மாவட்ட தலைவர்களை நேரில் அழைத்தும், தொலைபேசியில் தொடர்பு கொண்டும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் தெளிவுட கூறி இருக்கின்றேன்.
 
மேலும், இயக்கத்தின் கட்டுப்பாட்டை மீறுவோர் மீது, இயக்கத்தின் சார்பாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறி இருக்கின்றேன். இந்நிலையில் சில ஊடகங்களில் இளையதளபதி விஜய் மக்கள் இயக்கம் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவு அளித்ததுபோல் செய்திகள் வருகின்றன. அது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தி என்பதை தெளிவுபட தெரிவித்துக் கொள்கிறோம்.
 
எனவே இளையதளபதி விஜயின் ரசிகர்கள், எந்தவித குழப்பமும் அடையாமல் தங்கள் விருப்பம்போல் வருகின்ற சட்டமன்ற தேர்தலில், தங்கள் விருப்பமான கட்சிக்கு வாக்களிக்கலாம் என தெரிவித்துக் கொள்கிறேன். இளையதளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ, கொடியையோ எக்காரணம் கொண்டும் பயன்படுத்தக்கூடாது என்று மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மது விற்பனை 37 சதவிதம் உயர்வு: தேர்தல் அதிகாரிகள் விசாரணை