Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதற்குத்தான் இவ்வளவுமா? : கருணாநிதியை சந்திக்கும் சந்திரகுமார்

Webdunia
திங்கள், 11 ஏப்ரல் 2016 (15:40 IST)
தேமுதிகவிலிருந்து நீக்கப்பட்டு, மக்கள் தேமுதிக என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ள சந்திரகுமார் திமுக கலைஞர் கருணாநிதியை சந்திக்க  உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


 

 
மக்கள் நலக் கூட்டணியுடன், தேமுதிக கூட்டணி சேர்ந்தது தவறு என்றும், திமுகவுடன் கூட்டணி வைப்பதே சிறந்தது என்று குரல் எழுப்பி, தேமுதிகவில் இருந்து அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டவர் சந்திரகுமார்.
 
அவர் தற்போது, மக்கள் தேமுதிக என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். அவருக்கு திமுக பொருளாலர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில், திமுகவில் இணைவதற்கு அழைப்பை விடுத்தார். அதனை ஏற்று, இன்று மாலை அவர் கருணாநிதியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது “தேமுதிகவில் பிளவு ஏற்படுத்த வேண்டும் என்பது எங்களுடைய நோக்கமில்லை. திமுகவுடன் கூட்டணி அமைக்க இருக்கிறேன் என்று விஜயகாந்த் கூறினால், அவரது காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு விட்டு, அரசியலில் இருந்தே விலகி விடுகிறோம்.
 
கருணாநிதியும், மு.க.ஸ்டாலினும் அழைப்பு விடுத்தால் திமுகவுடன் கூட்டணி அமைக்கத் தயார்” என்றும் அவர் கூறினார்.
 
இதனையடுத்து, கோபாலபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், மக்கள் தேமுதிகவினர் வந்தால், தலைவர் கருணாநிதி வரவேற்பார்  என்று கூறியிருந்தார்.
 
எனவே, இன்று மாலை சந்திரகுமார், பார்த்தீபன் மற்றும் சி.எச்.சேகர் உள்ளிட்டவர்கள் கருணாநிதியை சந்திக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

Show comments