Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதிமுக அமைச்சர் வைத்த விருந்தில் திமுக பிரமுகருக்கு அடிஉதை

அதிமுக அமைச்சர் வைத்த விருந்தில் திமுக பிரமுகருக்கு அடிஉதை

அதிமுக அமைச்சர் வைத்த விருந்தில் திமுக பிரமுகருக்கு அடிஉதை
, வியாழன், 12 மே 2016 (10:35 IST)
ஸ்ரீவைகுண்டம் அருகே அமைச்சர் சண்முகநாதன் வைத்த விருந்தில் தகராறு செய்த திமுக பிரமுகருக்கு அடிஉதை விழுந்தது.
 

 
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளராக, அமைச்சர் சண்முகநாதன் போட்டியிடுகிறார்.
 
இந்த நிலையில், தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அதிமுகனவினரையும், பொது மக்களையும் உற்சாகப்படுத்த, அவரது சொந்த ஊரான பண்டார விளையில் தடபுடல் விருந்து வைத்தாக  கூறப்படுகிறது.
 
இந்த தகவல் அறிந்து, மது போதையில் அங்கு வந்த திமுக பிரமுகர் ஆரோன்  என்பவர் விருந்து குறித்து கேட்டு தகராறு செய்துள்ளார். இதனால், கடுப்பான அமைச்சர் சண்முகநாதனின் ஆதரவாளர்கள் ஆரோனை அடித்து உதைத்து நையப்புட்டி  எடுத்துவிட்டார்களாம். இதில், படுகாயமடைந்த ஆரோனை அருகில் இருந்தவர்கள் காப்பாற்றி தூத்துக்குடி அரசு மருத்துவனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிசிச்சை அளிக்கப்படுகிறது.
 
இந்த சம்பவம் குறித்து ஏரல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயலலிதாவுக்கு கும்பிடு; மக்களுக்கு முதுகு - தா.பாண்டியன் குற்றச்சாட்டு