Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காணாமல் போன நா.ம.க தலைவர் கார்த்திக் : வலைவீசி தேடும் நிர்வாகிகள்

Webdunia
செவ்வாய், 10 மே 2016 (14:15 IST)
தேர்தல் நெருங்கி வரும் வேளையில், நடிகரும், நாடாளும் மக்கள் கட்சியின் தலைவரும் ஆன கார்த்திக் எங்கு இருக்கிறார் என்று அவரின் கட்சி நிர்வாகிகள் தேடிக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


 

 
கார்த்திக்கின் நா.ம.கட்சி, சிவசேனா மற்றும் தமிழக மக்கள் கட்சியுடன் சேர்ந்து ‘விடியல் கூட்டணி’ அமைத்து வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 50 இடங்களில் போட்டியிடுகிறது.
 
அந்த தொகுதிகளில் பிரச்சாரம் செய்வேன் என்று கார்த்திக் ஏற்கனவே அறிவித்திருந்தார். இதனால், நா.ம.கட்சி தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர், அவர் பிரச்சாரத்திற்கு வருவார் என்று எதிர்பார்த்து காத்திருந்தார்கள். ஆனால் நேற்று வரை அவர் வரவில்லை.
 
நா.ம.க போட்டியிடும் 13 தொகுதிகளில் 5,000 முதல் 10 ஆயிரம் வரையிலான ஓட்டுகளை அவர்கள் பெறக்கூடும். இதனால், அங்கு போட்டியிடும் திமுக, அதிமுக கட்சிகளுக்குத்தான் பாதிப்பு ஏற்படும். இதனால் நா.ம. கட்சியினரை சரிகட்டும் வேலையில் அந்த கட்சிகள் இறங்கியுள்ளதாக தெரிகிறது.
 
இது கார்த்திக்கு தெரிய வர அப்படியே மாயமாகி விட்டாராம். அவர் எங்கிருக்கிறார் என்று அவரது கட்சி நிர்வாகிகளுக்கு கூட தெரியவில்லையாம். அவரது செல்போனும் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. 
 
இதனால் அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகள் பலர், கட்சியிலிருந்து விலகும் முடிவில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 
நடிகர் கார்த்திக்கை ஷூட்டிங்கிற்கு கூட்டி வருவதும், மீட்டிங்கிற்கு கூட்டி வருவதும் மிகவும் கடினம் என்று கமெண்ட் அடிக்கிறார்கள் கட்சி நிர்வாகிகள்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசம் - பாகிஸ்தான் இடையே நடந்த முதல் நேரடி பரிமாற்றம் - இந்தியாவுக்கு என்ன பிரச்னை?

நடிகை கஸ்தூரிக்கு நவம்பர் 29 வரை நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு..!

விஜய் போட்டியிடும் தொகுதி இதுவா? தவெக தர்மபுரி மாவட்ட தலைவர் சிவா தகவல்

தலைமறைவாகவில்லை, படப்பிடிப்பில் தான் இருந்தேன்: கஸ்தூரி விளக்கம்.!

எலான் மஸ்க்கை கெட்ட வார்த்தையில் அபிஷேகம் செய்த அதிபரின் மனைவி! - எலான் மஸ்க்கின் ரியாக்‌ஷன் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments