Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓவியா போயாச்சு - என்னவாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி?

Webdunia
ஞாயிறு, 6 ஆகஸ்ட் 2017 (10:43 IST)
பிரபல தொலைக்காட்சியில் வெளியாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நடிகை ஓவியா சென்றுவிட்டதால் அவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.


 

 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடக்கத்திலிருந்தே கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்தவர் ஓவியா. எதற்கும் அலட்டிக் கொள்ளாமல், மற்றவர்களுக்காக தன்னை மாற்றிக் கொள்ளாமல், வெளிப்படையாக பேசிக்கொண்டும், எப்போதும் சிரித்த படி இருந்த அவரை பலருக்கும் பிடித்துப் போனது.  
 
அதேசமயம் அவரை கார்னர் செய்து அழவைத்த காயத்ரி, ஜூலி, சக்தி ஆகியோருக்கு எதிராக ஓவியா ரசிகரக்ள் சமூகவலைத்தளங்களில் கொதித்து எழுந்தனர். ஓவியா ஆர்மி, ஓவியாபேரவை என்ற ஹேஷ்டேக்குகள் டிவிட்டரில் முதலிடத்தில் இருந்தன. 
 
இந்நிலையில், தன்னுடைய காதலை ஆரவ் ஏற்றுக்கொள்ளாததால் மனமுடைந்து, குழம்பிப் போன ஓவியா, மன உளைச்சல் காரணமாக, நீச்சல் குளத்தில் விழுந்து தற்கொலை செய்யும் முடிவிற்கு சென்றார். அதன் பின் அங்கிருந்தவர்கள் அவரை காப்பாற்றினர். அதன் பின் அவருக்கு உளவியல் மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினர். ஆனாலும், அங்கிருந்து வெளியேறுவதில் உறுதியாக இருந்த ஓவியாவை நேற்றி வெளியே அனுப்பிவிட்டனர். 
 
ஆனால், ஓவியா மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவார், கமல்ஹாசன் அவருக்கு ஆலோசனை வழங்கி மீண்டும் உள்ளே அனுப்பிவிடுவார் என எதிர்ப்பார்த்திருந்த ஓவியா ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஓவியாவிற்காகவே அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வந்ததாகவும், இனிமேல் பார்க்கப்போவதில்லை எனவும் பலர் கூறி வருகின்றனர். எனவே, அந்நிகழ்ச்சியின் டி.ஆர்.பி பெருமளவு குறையும் எனத் தெரிகிறது.
 
ஆனால், புதிதாக பிந்துமாதவியை உள்ள அனுப்பியுள்ளனர். அதனால், அவர் மூலமாக அந்நிகழ்ச்சி மீண்டும் சூடு பிடிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

விஷால் பற்றி அவதூறு பரப்பும் ஊடக போர்வை போர்த்திய விஷம நபர்கள்! - விஷால் மக்கள் நல இயக்கம் கண்டனம்!

சென்சார் ஆனது ‘விடாமுயற்சி’ திரைப்படம்.. எப்போது ரிலீஸ்?

விடாமுயற்சி படத்தின் ‘ரன்னிங் டைம்’ பற்றி வெளியான தகவல்!

மகன் படம் ஹிட்டானால் புகைப் பிடிப்பதை விட்டுவிடுகிறேன்… அமீர்கான் உறுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments