Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் தோல்வி எதிரொலி: திடீரென அயோத்தி ராமர் கோவிலுக்கு வரும் கூட்டம் குறைந்ததா?

Mahendran
புதன், 12 ஜூன் 2024 (12:56 IST)
அயோத்தி ராமர் கோயில் இருக்கும் தொகுதியில் பாஜக தோல்வியடைந்த நிலையில் அயோத்தி ராமர் கோவிலுக்கு வரும் கூட்டம் வெகுவாக குறைந்துள்ளதாக கூறப்படுவது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

அயோத்தியில் ராமர் கோவில் திறந்ததால் பாஜகவுக்கு பெரும் வாக்குகள் கிடைக்கும் என்றும் குறிப்பாக உத்தரபிரதேசத்தில் 80க்கு 80  கிடைக்கும் என்றும் கூறப்பட்டது. ஆனால் அயோத்தி ராமர் கோயில் இருக்கும் பைசாபாத்தில் தொகுதியிலேயே பாஜக தோல்வி அடைந்தது என்பதும் உத்தரபிரதேசம் மாநிலத்தை பொருத்தவரை பாஜக கூட்டணியை விட இந்தியா கூட்டணி தான் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பைசாபாத் தொகுதியில் சமாஜ்வாதி வேட்பாளர் ஆவதேஷ் பிரசாத் 554289 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற நிலையில் பாஜகவின் லல்லு சிங் பாஜக 499722 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

இந்த நிலையில் தேர்தல் முடிவுக்கு பின்னர் அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்வதை பாஜக தொண்டர்கள் நிறுத்திவிட்டார்கள் என்றும் அதனால் ராமர் கோவிலுக்கு வரும் கூட்டம் வெகுவாக குறைந்திருப்பதாகவும் இதனால் சில விமானங்களும் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேருந்தை தள்ளலாம்.. ரயிலை தள்ளிய ஊழியர்களை கேள்விப்பட்டதுண்டா? அதிர்ச்சி தகவல்..!

பிரதமர் மோடியின் 100 நாட்கள் ஆட்சியில் 38 ரயில் விபத்துகள்.. புள்ளி விவரங்கள் தரும் காங்கிரஸ்..!

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் இப்போதைக்கு சாத்தியமில்லை; ப சிதம்பரம்..!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு AI-க்கு பயிற்சி: மெட்டா நிறுவனம் திட்டம்!

இதுவே கடைசி.. போராட்டம் நடத்தும் மருத்துவர்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments