Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகரம்: மாசி மாத ராசி பலன்கள் (2021)

Webdunia
சனி, 13 பிப்ரவரி 2021 (17:08 IST)
உத்திராடம் 2, 3, 4 பாதம்,  திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்) - கிரகநிலை: சுக ஸ்தானத்தில் செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் ராஹூ - லாப ஸ்தானத்தில் கேது  - ராசியில் புதன், குரு, சுக்ரன், சனி - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
நிறைய யோசிக்கும் திறமையுடைய மகர ராசி அன்பர்களே நீங்கள் புதுமை படைக்க எண்ணுபவர்கள். இந்த மாதம் எதிர்ப்புகள் விலகும். கடன் தொடர்பான  பிரச்சனைகள் தீரும். பல வகையான  யோகங்கள் ஏற்படும். உடல் நோய்கள் நீங்கி ஆரோக்கியம் உண்டாகும். மன குழப்பம் நீங்கும். ஆனால் பிறருடன் பழகும்  போது நிதானம் தேவை.
 
தொழில், வியாபாரம் முன்னேற்றம் காணப்படும். தொழில் தொடர்பான காரியங்கள் வெற்றி பெறும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். பழைய பாக்கிகள்  வசூலிப்பது வேகம் பிடிக்கும். வியாபாரம் தொடர்பான  பிரச்சனைகளில் சாதகமான நிலையே உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நன்மை தீமை பற்றிய  கவலைப்படாமல் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை திறம்பட செய்வார்கள். போட்டிகள் மறையும்.
 
திருமணம் தொடர்பான காரியங்கள் சாதகமாக பலன் தரும். குடும்பத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். உங்களது வார்த்தைக்கு மதிப்பு கூடும். கணவன்,  மனைவிக்கிடையே இருந்த மனக்கசப்பு நீங்கும். பிள்ளைகள் உங்களது பேச்சுக்கு செவி சாய்ப்பார்கள். வாய்க்கு ருசியான உணவும் கிடைக்கும்.
 
பெண்களுக்கு மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். சமையல் செய்யும் போதும் மின் சாதனங்களை இயக்கும் போதும் கவனம் தேவை.
 
கலைத்துறையினருக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். எல்லா காரியங்களும் நல்ல படியாக நடக்கும். ஆராய்ந்து செய்யும் காரியங்கள் சாதகமான  பலன் தரும்.  வாகனங்களை ஓட்டும்போதும் எச்சரிக்கை அவசியம். வீண் செலவு ஏற்படும். அடுத்தவருக்கு எவ்வளவு நல்லது செய்தாலும் அது எடுபடாமல்  போகலாம். 
 
அரசியல்துறையினருக்கு மற்றவர்களுக்கு உதவ போய் வீண் பழி ஏற்படலாம் கவனம் தேவை.. தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆனால்  பணவரத்து திருப்திகரமாக இருக்கும். மேலிடத்தின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பது நன்மை தரும்.
 
மாணவர்களுக்கு கல்வி பற்றிய மனக் கவலை ஏற்பட்டு நீங்கும். பெற்றோர், ஆசிரியர் ஆலோசனை கைகொடுக்கும்.
 
பரிகாரம்: திங்கள் கிழமைகளில் சோமவார விரதம் அனுஷ்டிப்பது கஷ்டங்களை போக்கும்.
அதிர்ஷ்ட தினங்கள்: பிப்ரவரி: 19, 20, 21
சந்திராஷ்டம தினங்கள்: பிப்ரவரி: 26, 27, 28.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments