Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆறு நிமிடம் கட் – ஜீரோப் படக்குழு அதிரடி

Webdunia
திங்கள், 24 டிசம்பர் 2018 (11:41 IST)
நடிகர் ஷாருக் கான் நடிப்பில் கிறிஸ்துமஸ் வெளியீடாக வந்த ஜீரோப் படம் ரசிகர்களை பெரியளவில் ஈர்க்காததால் படத்தில் இருந்து 6 நிமிடக் காட்சியைக் குறைத்துள்ளது படக்குழு.

நடிகர் ஷாருக் கான் தொடர்ந்து தோல்விப்படங்களாக நடித்து வருகிறார். பாலிவுட் சூப்பர் ஸ்டார்களில் ஆமிர்கானும், சல்மான் கானும் தொடர்ந்து வெற்றிப்படங்களாக நடித்து வசூல் சாதனைப் புரிந்து வர ஷாருக்கின் சமீபத்தியப் படங்களான ஹேப்பி நியூ இயர், தில்வால்யே, ஃபேன், டியர் ஜிண்டகி, ரயீஸ் ஆகியப் படங்கள் வரிசையாக தோல்வியடைந்து அவரது ரசிகர்களுக்க் ஏமாற்றத்தை அளித்து வருகிறது.

அதனால் ஷாருக் கான் தனது சமீபத்தையப் படமான ஜீரோவைப் பெரிதும் நம்பிக் கொண்டிருந்தார்.ஆனந்த் 2ல் ராய் இயக்கியுள்ள ஜீரோவில் ஷாருக் கானுடன், அனுஷ்கா ஷர்மா, காட்ரினா கைப் ஆகியோருடன் சல்மான் கான் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் ஷாருக் கான் கல்யாணமாகாத 37 வயது குள்ள மனிதனாக நடித்திருந்தார்.

இப்படத்திற்கான பாடல்கள் மற்றும் டீசர், டிரைலர்கள் வெளியாகி மக்கள் மனதில் நல்ல வரவேற்பைப் பெற்றன. அதனையடுத்து கிறிஸ்துமஸ் வெளியீடாக டிசம்பர் 21 ஆம் தேதி வெளியானது. ரிலிஸுக்குப் பின்னான வரவேற்பு படக்குழு எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. அதனால் படக்குழு படத்தின் நீளமான சிலக் காட்சிகளை நீக்கி படத்தின் நீளத்தைக் குறைக்க முடிவு செய்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அடுத்த கட்டுரையில்
Show comments