Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே வியாபாரத்தில் பட்ஜெட்டின் கால்பங்கு தொகையை அள்ளிய 2.0

Webdunia
செவ்வாய், 4 ஜூலை 2017 (22:26 IST)
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள '2.0' படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் வியாபாரம் ஆரம்பித்துவிட்டது.



 


முதல்கட்டமாக இந்த படத்தின் அனைத்து மொழிகளின் சாட்டிலைட் உரிமையை ரூ.110 கோடிக்கு ஜிடிவி பெற்றுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த செய்தியை லைகா நிறுவனத்தின் ராஜூ மகாலிங்கம் உறுதி செய்துள்ளார். இதே டிவிதான் சமீபத்தில் விஜய்யின் 'மெர்சல்' படத்தின் சாட்டிலைட் உரிமையை ரூ.30 கோடிக்கு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
 
2.0 படத்தின் பட்ஜெட் ரூ.450 கோடி என்று கூறப்படும் நிலையில் நாலில் ஒரு பங்கு சாட்டிலைட் உரிமையின் மூலமே கிடைத்துவிட்டது. இன்னும் தமிழக, இந்திய, உலக அளவிய வியாபாரம் உள்ளதால் இந்த படம் இருமடங்கு லாபத்தை சம்பாதித்து கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறாது.
 
ரஜினி படத்தின் இத்தனை பெரிய வியாபாரத்தை பார்த்து கோலிவுட் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வாயை பிளந்துள்ளது. தற்போது இந்த படத்தின்  போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருப்பதாகவும் இந்த படம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகும் என்றும் கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரேஸ் மைதானத்தை தெறிக்க விட்ட அஜித் எண்ட்ரி.. ஆலுமா டோலுமா போட்டு கொண்டாட்டம்! - அனிருத் பகிர்ந்த வீடியோ!

86 கோடியா 186 கோடியா.. கலெக்‌ஷனை மாற்றி சொன்னார்களா? - கேம் சேஞ்சரால் புதிய சர்ச்சை!

காத்து வாங்கும் கேம் சேஞ்சர் தியேட்டர்.. தனியாக உக்காந்திருந்த ராம்சரண்? - வைரலாகும் வீடியோ!

இறந்தது கமலா காமேஷ் இல்லை.. மகள் ரியா உமா ரியாஸ் விளக்கம்..!

பழம்பெரும் நடிகை கமலா காமேஷ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments