Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’இந்தி தெரியாது போடா’: சாந்தனு மனைவியின் டீசர்ட் வைரல்!

Webdunia
ஞாயிறு, 6 செப்டம்பர் 2020 (08:13 IST)
’இந்தி தெரியாது போடா’: சாந்தனு மனைவியின் டீசர்ட் வைரல்!
இந்தியா முழுவதும் ஹிந்திக்கு ஆதரவு இருந்தாலும் தமிழகத்தில் மட்டும் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தி எதிர்ப்புக் கொள்கை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. அந்த வகையில் சமீபத்தில் திமுக எம்பி கனிமொழி அவர்கள் தனக்கு இந்தி தெரியாது என்று கூறியதால் விமான நிலைய ஊழியர் ஒருவரால் அவமதிக்கப்பட்டதாக கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
தமிழகத்தில் அவ்வப்போது ஹிந்தி எதிர்ப்பு குரல்கள் பல்வேறு வடிவங்களில் தோன்றி வரும் நிலையில் தற்போது ஒருசில சினிமா நட்சத்திரங்கள் ஹிந்திக்கு எதிரான டீசர்ட் அணிந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன
 
நேற்று இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா 'I am a தமிழ் பேசும் Indian' என்ற வாசகங்களுடன் கூடிய டீ-சர்ட் அணிந்திருந்தார். இந்த நிலையில் தற்போது சாந்தனு மனைவி கிகி ‘எனக்கு ஹிந்தி தெரியாது போடா’ என்ற வாசகங்களுடன் கூடிய டி ஷர்ட்டை அணிந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்
 
இந்தி எதிர்ப்பு வாசகங்களுடன் கூடிய இந்த டீசர்ட்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சினிமா நட்சத்திரங்களை தொடர்ந்து தற்போது பொது மக்களும் இந்தி எதிர்ப்பு வாசகங்களுடன் கூடிய டீசர்ட்களை அணிய ஆரம்பித்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’இந்தியன் 2’ டிரைலர் எப்போது? லைகா நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அடியாத்தி இது என்ன ஃபீலு.. வாத்தி புகழ் சம்யுக்தாவின் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

மேலும் ஒரு சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம்!

ஆர் ஜே பாலாஜியின் மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தின் டைட்டில் இதுதான்…!

50 கோடி ரூபாய் வசூலைக் கடந்த சூரி… தயாரிப்பாளர் அளித்த காஸ்ட்லி பரிசு!

அடுத்த கட்டுரையில்
Show comments