Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலையாள சினிமாவின் நுழையும் இளம் இசையமைப்பாளர் !

Webdunia
திங்கள், 25 ஜனவரி 2021 (22:13 IST)
தமிழ் சினிமாவில் தனக்கெனத் தனிபாணியைக் கைக்கொண்டு இசையமைத்து வருபவர் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். இவர் தற்போது மலையாள சினிமாவில் நுழையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சந்தோஷ் நாராயணன். இவர் குக்கூ, கபாலி,  காலா, மெட்ராஸ் உள்ளிட்ட படங்களில் தனது சிறந்த இசையைக் கொடுத்து ரசிகர்களை மகிழ்வித்துள்ளார்.

இந்நிலையில், தமிழ் சினிமாவில் இருந்து முதன் முதலாக சந்தோஷ் நாராயணன் மலையாள சினிமாவில் நுழையவுள்ளார்.

அன்வேஷிப்பின் கண்டெத்தும்( விசாரித்தால் கண்டுபிடிக்கலாம்) என்ற படத்தின் மூலம் இச்சாதனையைப் படைத்துள்ளார் அவர்.

இப்படத்தின் டொவினோ தாமஸ் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குநர் டார்வின் சூரியாகோஷ் என்பவர் இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

அக்ஷய் குமார் பெயரை பயன்படுத்தி தமிழ் நடிகை மோசடியா? தயாரிப்பாளரின் அதிர்ச்சி புகார்..!

3 நாளில் ‘மகாராஜா’ வசூல் இத்தனை கோடியா? தயாரிப்பாளரின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

டபுள் ஐஸ்மார்ட்’ திரைப்படம் திரையரங்குகளில் ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகிறது!

ஆஹா வழங்கும் ‘வேற மாறி ஆபீஸ் - சீசன் 2’வெப் சீரிஸ் பூஜையுடன் துவங்கியது!

'சௌகிதார்' எனும் புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை 'ரோரிங் ஸ்டார்' ஸ்ரீ முரளி வெளியிட்டார்!

அடுத்த கட்டுரையில்
Show comments