Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காமெடியை அடுத்து புது அவதாரமெடுத்த யோகி பாபு! இது அவருக்கு சரிப்பட்டு வருமா?

Webdunia
வியாழன், 11 ஏப்ரல் 2019 (15:39 IST)
தமிழ் சினிமாவின் தற்போதைய காமெடி கிங் யோகி பாபு எண்ணெற்ற காமெடி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டார்.
 
சமீபகாலமாக வெளிவரும் பெரும்பான்மையான படங்களில் யோகி பாபுவின் காமெடி இடம்பெற்றுவிடுகிறது. அந்த அளவுக்கு அவரது யதார்த்தமான நடிப்பும்,  உருவ அமைப்பும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்து போக இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கூடி கொண்டே வருகிறது.  தற்போது தளபதி 63 படத்திலும் கம்மிட்டாகி நடித்து வருகிறார்.
 
பல முன்னணி நடிகர் நடிகைகளின் படங்களில் நடித்து வந்த யோகிபாபு தற்போது தர்மபிரபு படத்தில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.  இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும்  வரவேற்பைப் பெற்றது. தற்போது யோகி பாபுவின் கைவசம் 19 படங்கள் உள்ளது.  
 
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவலென்னவென்றால், காமெடி கிங் யோகி பாபு தான் நடிக்கவிருக்கும் அடுத்த  படத்திற்கு அவரே கதை, திரைக்கதை வசனம் எழுதுகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை இயக்குநர் ராஜேஷின் உதவி இயக்குனர் ராஜசேகர் இயக்கவுள்ளார். யோகிபாபு ஏற்கனவே லொள்ளுசபாவிற்கு காமெடி ஸ்க்ரிப்ட் எழுதியவர் ஆதலால்  இந்த புது அவதாரத்தில் அனுபவம் உள்ளவர் என்பதால் அவரது ஸ்க்ரிப்டில் உருவாகும் காமெடிக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் தெலுங்கு திரையுலகினர் சந்திப்பு.. அல்லு அர்ஜுன் விவகாரமா?

கண்கவர் உடையில் ஐஸ்வர்யா லஷ்மியின் வித்தியாசமன போட்டோஸ்!

ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோ ஆல்பம்!

ஒரு நாளில் ஒரு கோடி பேரால் பார்க்கப்பட்ட சூர்யாவின் ‘ரெட்ரோ’ பட டீசர்!

இசையமைப்பாளராக அறிமுகமான ஹாரிஸ் ஜெயராஜின் மகன் நிக்கோலஸ் ஹாரிஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments