Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பரபரப்புக்காக இப்படியா பண்றது? … தோல் நிறத்தில் உள்ளாடை அணிந்திருந்த ஜான் சீனா- வெளியான புகைப்படம்!

vinoth
திங்கள், 11 மார்ச் 2024 (11:34 IST)
96 ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்து முடிந்துள்ள நிலையில் அதிகபட்சமாக ஏழு பிரிவுகளில் விருதுகளை வென்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது கிறிஸ்டோபர் நோலனின் ஓப்பஞ்ஹெய்மர் திரைப்படம். சிறந்த இயக்குனர் (கிறிஸ்டோபர் நோலன்), சிறந்த நடிகர் (சில்லியன் மர்ஃபி), சிறந்த துணை நடிகர் (ராபர்ட் டௌனி ஜூனியர்), சிறந்த ஒளிப்பதிவு ( ஹோய்டே வான் ஹோய்டோமா), சிறந்த படத்தொகுப்பு மற்றும் சிறந்த ஒரிஜினல் இசைஆகிய பிரிவுகளில் இதுவரை விருதை வென்றுள்ளது.

ஓப்பன்ஹெய்மருக்கு அடுத்து புவர் திங்ஸ், அனாடமி ஆஃப் அ பால் மற்றும் பார்பி ஆகிய படங்கள் விருதுகளை வென்றுள்ளன. இன்று ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்வில் குத்துச் சண்டை வீரரும் நடிகருமான ஜான் சீனா, மேடையில் ஆடைகள் இன்றி நிர்வாணமாக வந்தது பீதியைக் கிளப்பியுள்ளது.

சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான விருதை அறிவிக்க வந்த அவர் ஆடைகளின்றி வரவே, அதிர்ச்சியான தொகுப்பாளர் அவரிடம் விருது பெற்றவர் பெயர் இருக்கும் கவரைக் கொடுத்தார். அதைவைத்து தன்னுடைய அந்தரங்க பகுதியை மறைத்துக் கொண்டு மேடைக்கு நடுவே வந்தார் ஜான் சீனா. பின்னர் விருதுக்கான பட்டியலை அறிவித்த போது கேமரா ஸ்க்ரீனை நோக்கி சென்றதால் அசம்பாவிதமாக எதுவும் நடக்கவில்லை.

இது சம்மந்தமாக ஜான் சீனாவுக்கு ரசிகர்கள் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால் ஜான் சீனா அந்த மேடைக்கு நிர்வாணமாக வரவில்லை என்றும் அவர் அந்தரங்க பாகங்களை மறைக்கும் தோலின் நிறத்திலான உள்ளாடை அணிந்துதான் வந்தார் என்றும் தற்போது தெரியவந்துள்ளது. மேலும் அது சம்மந்தமான புகைப்படமும் இணையத்தில் வெளியாகியுள்ளது. வெறும் பரபரப்புக்காக இப்படி ஜான் சீனா ஆஸ்கர் கமிட்டியோடு இணைந்து நடந்துகொண்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

மூன்று ஹீரோக்களை வைத்து அடுத்த படத்தை இயக்கும் பா ரஞ்சித்… அவரே கொடுத்த அப்டேட்!

மீண்டும் சூர்யாவுடன் இணைய வாய்ப்பிருக்கிறதா?... இயக்குனர் பாலா அளித்த பதில்!

விக்ரம் பற்றிய கேள்வி… நேர்காணலில் இயக்குனர் பாலாவின் ரியாக்‌ஷன் இதுதான்!

கையில் பாம்பை சுற்றிக்கொண்டு கார் ரைட்… அடுத்த சர்ச்சையில் சிக்கிய டிடிஎஃப் வாசன்!

அடுத்த கட்டுரையில்