Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சங்கமித்ரா படத்தில் களமிறங்கும் சுபா - வெளியான தகவல்

Webdunia
திங்கள், 22 மே 2017 (17:12 IST)
இயக்குனர் சுந்தர். சி-யின் இயக்கத்தில் உருவாகும் சங்கமித்ரா படத்தில் பிரபல இரட்டை எழுத்தாளர்கள் சுபா பணிபுரிய இருப்பது தெரியவந்துள்ளது.


 

 
பாகுபலி படத்தின் வெற்றி,  சரித்திர படங்களை எடுக்கும் ஆர்வத்தை சில இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ஜெயம்ரவி, ஆர்யா, நடிகை ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடிக்கும் பிரம்மாண்ட  படமாக தயாராக இருக்கிறது சங்கமித்ரா. பலகோடி பட்ஜெட் உடைய இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ்  தயாரிக்கிறது. இப்படத்தை சுந்தர் சி இயக்குகிறார். இப்படத்தின் துவக்க விழா சமீபத்தில் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற கேன்ஸ் பட விழாவில் நடந்தது. 
 
இந்நிலையில், தனி ஒருவன், கவண் ஆகிய படங்களில் பணிபுரிந்த பிரபல இரட்டை எழுத்தாளர்கள் சுபா (சுரேஷ் & பாலகிருஷ்ணன்) இப்படத்தில் பணி புரிவது தெரியவந்துள்ளது. இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் டிவிட் செய்துள்ள சுரேஷ் “ சங்கமித்ரா படத்தில் பணிபுரிவது மகிழ்ச்சியாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.


 

 
வழக்கமாக ஒரு திரைப்படத்தில் சுபா பணிபுரியும் போது, அப்படத்தின் கதை, வசனத்தை அவர்கள் எழுதுவார்கள். திரைக்கதை மற்றும் இயக்கத்தை இயக்குனர் மேற்கொள்வார். இதேதான் சங்கமித்ராவிலும் தொடர்கிறதா என்பது போக போக தெரிய வரும்.

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

அடுத்த கட்டுரையில்
Show comments