Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2015 தல தீபாவளி? ரசிகர்கள் உற்சாகம்

Webdunia
வியாழன், 28 மே 2015 (16:10 IST)
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை தினங்களில் தங்களுக்குப் பிடித்த நடிகரின் படம் வெளியானால் ரசிகர்களின் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். படத்தை வாங்கியவர்களும், விற்றவர்களும் ஆர்வமாக இருப்பர். திருவிழா கலெக்ஷன் ஏமாற்றாது என்ற நம்பிக்கை.
 
அஜீத் நடிப்பில் சிவா இயக்கி வரும் (தல 56) படம் சத்தமில்லாமல் தொடங்கி தொடர்ந்து படப்பிடிப்பு நடக்கிறது. கோடைக்காக சில தினங்கள் மட்டும் நடுவில் ஓய்வு.
ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் இந்தப் படத்தை வரும் தீபாவளிக்கு வெளியிட முடிவு செய்துள்ளனர். படத்தின் பட்ஜெட் 15 கோடிகளை தாண்டினால் வருடத்தில் 10 தினங்கள் மட்டுமே அப்படத்தை வெளியிட வேண்டும் என்று - அந்த பத்து தினங்கள் எவை என தயாரிப்பாளர்கள் சங்கம் பட்டியலிட்டுள்ளது. அதன்படி தீபாவளி, பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைக் காலங்களில் மட்டுமே அஜீத் படத்தை வெளியிட முடியும்.
 
இந்த கணக்குகளை கூட்டிக் கழித்து தல படம் தீபாவளிக்கு வெளியாகிறது என இணையத்தில் இப்போதே வாண வேடிக்கைக்கு தயாராகிறது அஜீத்தின் ரசிகர்கள் வட்டாரம். இந்தப் படத்தில் அஜித்தின் ஜோடியாக ஸ்ருதியும், தங்கையாக லட்சுமி மேனனும் நடித்து வருகின்றனர்.

தனுஷின் ‘ராயன்’ படத்தின் செகண்ட் சிங்கிள்.. ஏஆர் ரஹ்மானிடம் இருந்து ஒரு கானா பாடலா?

சேலையில் கிளாமர் போட்டோஷூட் நடத்திய ஸ்ரேயா! ரீசண்ட் போட்டோ ஆல்பம்!

சேலையில் கிளாமர் போட்டோஷூட் நடத்திய ஸ்ரேயா! ரீசண்ட் போட்டோ ஆல்பம்!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் நாயகி நயன்தாராவா? அடிச்சுவிடும் நெட்டிசன்கள்..!

கற்றது தமிழ் படத்தால் எனக்கு 2 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம்… கருணாஸ் பகிர்ந்த தகவல்!