Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயக்குநராக அறிமுகமாகும் பீட்டர் ஹெய்ன்

Webdunia
திங்கள், 8 மே 2017 (17:01 IST)
பிரபல சண்டைப் பயிற்சியாளரான பீட்டர் ஹெய்ன் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில், ஹீரோவாக மோகன்லால் நடிக்கிறார்.
 
 
கடந்த வருடம் மோகன்லால் நடிப்பில் வெளியான மலையாளப் படம் ‘புலிமுருகன்’. ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்த  எடுக்கப்பட்ட இந்தப் படத்துக்கு, பீட்டர் ஹெய்ன் தான் சண்டைப் பயிற்சி. படம் சூப்பர் டூப்பர் ஹிட். அத்துடன், சிறந்த சண்டைப்  பயிற்சியாளருக்கான ‘தேசிய விருது’ம் பெற்றார் பீட்டர் ஹெய்ன்.
 
இந்தப் படத்தின்போது, மோகன்லால் – பீட்டர் ஹெய்ன் இருவருக்குள்ளும் நெருக்கமான நட்பு ஏற்பட்டிருக்கிறது. அப்போது, தான் இயக்குநராக விரும்பும் ஆசையை மோகன்லாலிடம் சொல்லியிருக்கிறார் பீட்டர் ஹெய்ன். ‘அந்தப் படத்தில் நானே  நடிக்கிறேன்’ என்று அதிர்ச்சி கொடுத்த மோகன்லால், ‘எனக்கான கதையைத் தயார் செய்யுங்கள்’ என்றும் கூறியிருக்கிறார். 
 
எனவே, மோகன்லாலுக்கான கதையைத் தயார்செய்து வருகிறார் பீட்டர் ஹெய்ன். ஆக்‌ஷன் படமாக உருவாகும் இது, பல  மொழிகளிலும் தயாராகிறது. எனவே, பல மொழிகளைச் சேர்ந்த கலைஞர்கள் இந்தப் படத்தில் பணியாற்றப் போகிறார்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்துஜா ரவிச்சந்திரனின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

தமிழ்ப் படம் புகழ் ஐஸ்வர்யா மேனனின் கார்ஜியஸ் போட்டோஸ்!

பொங்கல் ரிலீஸை உறுதி செய்த மெட்ராஸ்காரன் படக்குழுவினர்!

விடாமுயற்சி பார்த்துவிட்டு அஜித் சார் இதைதான் சொன்னார்… மகிழ் திருமேனி பகிர்ந்த தகவல்!

கௌதம் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி நடிக்கும் ‘டாம்னிக்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments