Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரைவில் சினிமாவில் இருந்து விலகுவேன்… சகநடிகரிடம் சொல்லிய அஜித் – ரசிகர்கள் அதிர்ச்சி !

அஜித்
Webdunia
வெள்ளி, 31 ஜனவரி 2020 (15:24 IST)
தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக இருந்து வரும் அஜித் இன்னும் சில சினிமாக்களில் நடித்து விட்டு சினிமாவை விட்டு விலகும் எண்ணத்தில் இருப்பதாக தன்னிடம் தெரிவித்ததாக நடிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

லொள்ளு சபா தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடித்து புகழ்பெற்ற லொள்ளு சபா சாமிநாதன் சமீபத்தில் ஒரு நேர்காணல் அளித்திருந்தார். அதில் தான் கூட சேர்ந்து நடித்த நடிகர்களுடனான அனுபவம் பற்றி கூறிய அவர் அஜித்தைப் பற்றி ஒரு தகவலைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

நேர்காணலில் ‘விவேகம் படத்தின் போது நான் அஜித்துடன் நடித்துக் கொண்டிருந்தேன். அப்போது என் தோல் மேல் கைபோட்டுக் கொண்டு அஜித் நீங்கள் எத்தனைப் படங்களில் நடித்திருப்பீர்கள்? எத்தனை ஹீரோக்களோடு நடித்திருக்கிறீர்கள்?’என என்னைப் பற்றி விசாரித்தார். அதற்கு நான் ’500 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறேன் சார்’ என சொன்னேன். பின்னர் அஜித் சார் ’நான் இன்னும் சில படங்களில் மட்டுமே நடிக்க இருக்கிறேன். நான் வேண்டாம் என்று மக்கள் முடிவு செய்வதற்கு முன்னால் நானாகவே வெளியேறிவிட வேண்டும் என நினைக்கிறேன் எனக் கூறினார்.’ நான் உடனே ’சார் அப்படி எல்லாம் செய்து விடாதீர்கள் உங்கள் ரசிகர்கள் உங்கள் படத்துக்காக காத்துக் கிடக்கிறார்கள்’ எனக் கூறினேன்.’ எனப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் கலக்க வரும் சுந்தர் சி - வடிவேலு கூட்டணி.. ‘கேங்கர்ஸ்’ டிரைலர் ரிலீஸ்..!

பீரோ விழுந்ததால் பலியான பெண்.. ஆணவக்கொலை என சந்தேகம்.. பிணம் தோண்டி எடுக்கப்படுமா?

’குட் பேட் அக்லி’ படத்தில் சிம்ரன் ஆடிய அட்டகாசமான பாடல்.. தியேட்டரே ஆட்டம் போடும்..!

ரஜினி படத்தை விட ஒரு கோடி ரூபாய் அதிக பிசினஸ் செய்த விஜய் படம்.. முழு தகவல்கள்..!

’எம்புரான்’ படத்திற்கு தடை.. கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments