Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சம்பளத்தை சொல்லி ராஜ்கமல் பிலிம்ஸை அதிரவைத்த விக்னேஷ் சிவன் & ப்ரதீப்!

Webdunia
செவ்வாய், 14 நவம்பர் 2023 (07:57 IST)
பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. 5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் திரையரங்கு மூலமாகவே 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து ப்ரதீப் நடிப்பு மற்றும் இயக்கம் என இரண்டிலும் கவனம் செலுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் கட்டமாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க உள்ளார் என தகவல்கள் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகின. இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என சொல்லப்பட்டது. இதற்கான முதல் கட்ட வேலைகள் நடந்து வந்தன.

இந்நிலையில் இப்போது இந்த படத்தில் நடிகர் எஸ் ஜே சூர்யா இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தை தயாரிக்க இருந்த ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தில் இருந்து விலகி உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்குக் காரணம் படத்தின் பட்ஜெட்டை ஏகத்துக்கும் அதிகமாக இழுத்துவிட்டதுதானாம். படத்தில் ப்ரதீப்புக்கு 20 கோடி ரூபாய் சம்பளம் என்றும், விக்னேஷ் சிவனுக்கு 10 கோடி ரூபாய் சம்பளமென்றும் சொல்லி ராஜ்கமல் பிலிம்ஸை திடுக்கிட வைத்தார்களாம். அதனால் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் விலகிவிட இப்போது லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கீர்ன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க முன்வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் VJS நடிக்கும் படத்தில் இணையும் முன்னணி பாலிவுட் நடிகை!

நான் ராஜமௌலி படத்தில் நடிக்க மாட்டேன் என்று சொல்லி சர்ச்சையில் சிக்கிய சிரஞ்சீவி!

புஷ்பா கதாபாத்திரத்தை இப்படிதான் நான் உருவாக்கினேன் -இயக்குனர் சுகுமார் பகிர்ந்த தகவல்!

அல்லு அர்ஜுன் & அட்லி கூட்டணியில் உருவாகும் படத்துக்கு இவர்தான் இசையமைப்பாளரா?

Pure 90S Vibe GBU மாமே!: அஜித் படத்துல அண்ணன எறக்குறோம்.. ‘அக்கா மக’ டார்கிய உள்ளே கொண்டு வந்த ஆதிக்!

அடுத்த கட்டுரையில்
Show comments