Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷ் படத்தின் பாடல்கள் யூடியூப்பில் இருந்து நீக்கம் ஏன்? பரபரப்பு தகவல்

Webdunia
சனி, 6 ஏப்ரல் 2019 (17:43 IST)
இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில், தனுஷ் நடித்துள்ள என்னை நோக்கி பாயும் தோட்டா. இப்படம் எப்போது வெளியாகும் என்று தனுஷ் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் பாடல்கள் யூடியூப்  தளத்தில் இருந்து நீக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
மறுவார்த்தை பேசாதே. விசிறி , நான் பிழைப்பேனா ஆகிய பாடல்கள் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. இப்பாடலாள் கவுதம் மேனனின் ஒன்றாக யூடியூப் சேனலில் வெளியானது.  
 
தற்போது இப்படத்தின் இசை உரிமையை வாங்க சோனி நிறுவனம்  முன் வந்துள்ளதாகவும், இதன் காரணத்தால் தான் பாடல்கள் யூடியூப் தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக இப்படத்தின் பாடல்கள் ஒன்றாக யூடியூப் பக்கத்தில் வெளிட்டார்  கவுதம் மேனன். ஆனால்  இப்போது பாடல்கள் பிரைவேட் செய்யப்பட்டதால் தான் ரசிகர்களால் அதைப் பார்க்க முடியவில்லை என்று தெரிகிறது. 
 
இதற்கான ஒப்பந்தங்கள் முடிவடைந்தவுடன் மீண்டும் பாடல்கள் யூடியூப் தளத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments