Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடபாவிங்களா... என் திருமண விஷயம் எனக்கு மட்டும் லேட்டா தெரியவருது - வரலக்ஷ்மி ஆவேச பதிவு!

Webdunia
செவ்வாய், 19 மே 2020 (16:57 IST)
போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார். தொடர்ந்து தாரை தப்பட்டை, மாரி 2 , சர்க்கார், விக்ரம் வேதா, சண்டக்கோழி 2 , போன்ற படங்களில் வித்யாசமான கதாபாத்திரங்கள் ஏற்று நடித்திருந்தார்.

நடிப்பது மட்டும் தன் கடமை என்று நிறுத்தி விடாமல் தொடர்ந்து சமூகத்திற்கு எதிராக நடக்கும் அவலங்களை தட்டி கேட்பது, பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை எதிர்த்து சக்தி என்ற பெண்களுக்கு பாதுகாப்பான அமைப்பையும் நடத்தி வருகிறார். வரலக்ஷ்மி கடந்த சில வருடங்களாக நடிகர் விஷாலை காதலித்து வந்தார். நடிகர் சங்க கட்டிடம் கட்டிமுடித்ததும் திருமணம் செய்துகொள்வதாக விஷால் தெரிவித்திருந்த நிலையில் சங்கத்தின் உறுப்பினர் ஆனதும் வரலட்சுமியின் அப்பா சரத்குமாரை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கினார். இதனால் இரு குடும்பத்திற்குள் மனக்கசப்பு ஏற்பட்டு பின்னர் இவர்களின் காதல் முறிந்துவிட்டது. விஷாலுக்கும் வேறொரு பெண்ணுடன் நிச்சயம் ஆகிவிட்டது.

இந்நிலையில் நடிகை வரலட்சுமி இந்திய கிரிக்கெட் அணியில் முக்கிய பொறுப்பில் இருந்து வரும் நபர் ஒருவரை காதலிப்பதாகவும், விரைவில் அவரை திருமணம் செய்துகொள்ளவிருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. மேலும் மற்றொரு தொழிலதிபர் ஒருவருடனும் காதல் கிசுகிசுக்கப்பட்ட வரலக்ஷ்மி செம கடுப்பாகி இது குறித்து ட்விட் செய்துள்ளார். அந்த பதிவில், " எனக்குத் திருமணம் என்ற விஷயம் ஏன் எனக்கு மட்டும் லேட்டா தெரிகிறது? ஹஹாஹா மீண்டும் அதே முட்டாள்தனமான வதந்திகள்.. ஏன் எல்லோரும் என் திருமண விஷயத்தில் இவ்வளவு ஆர்வமாக இருக்கிறீர்கள்..? எனக்குத் திருமணம் என்றால்  நான் கூரை உச்சியில் அமர்ந்து கூச்சலிடு சொல்லுவேன். இப்போதைக்கு எனக்கு திருமணமும் இல்லை... நான் சினிமாவிற்கு முழுக்கு போடவுமில்லை என கிசு கிசு எழுதும் அத்தனை மீடியாக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

86 கோடியா 186 கோடியா.. கலெக்‌ஷனை மாற்றி சொன்னார்களா? - கேம் சேஞ்சரால் புதிய சர்ச்சை!

காத்து வாங்கும் கேம் சேஞ்சர் தியேட்டர்.. தனியாக உக்காந்திருந்த ராம்சரண்? - வைரலாகும் வீடியோ!

இறந்தது கமலா காமேஷ் இல்லை.. மகள் ரியா உமா ரியாஸ் விளக்கம்..!

பழம்பெரும் நடிகை கமலா காமேஷ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

புஷ்பாவால் தள்ளிப்போன இண்டெஸ்டெல்லார் மீண்டும் ரீரிலீஸ்! - நோலன் ரசிகர்கள் ஹேப்பி!

அடுத்த கட்டுரையில்