Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யார் முதல்வர் வேட்பாளர்??? அக்டோபர் 7 ஆம் தேதி அறிவிப்பு - கே.பி.முனுசாமி

Webdunia
திங்கள், 28 செப்டம்பர் 2020 (15:40 IST)
முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் இணைந்து வரும் அக்டோபர் 7ம் தேதி  யார் முதல்வர் வேட்பாளார் எப்பதை அறிவிப்பார்கள் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

இன்று காலை 10 மணிக்கு கூடிய இந்த கூட்டம் 5 மணி நேரத்திற்குப் பின்னர் சற்று முன்னர் முடிவடைந்தது. இந்த கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து ஒருமித்த முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதிமுகவில் உள்ள ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் முதல்வர் வேட்பாளர் குறித்த ஆலோசனையை தொடங்கியபோது கூச்சல் குழப்பங்கள் ஏற்படுத்தியதால் முதல்வர் வேட்பாளர் குறித்து ஒருமித்த முடிவு எடுக்காமலேயே கூட்டம் முடிவடைந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது, அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் இணைந்து வரும் அக்டோபர் 7ம் தேதி அறிவிப்பார்கள்!" அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

மேலும்  5 மணி நேரம் நடைபெற்ற அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் மொத்தம் 15 தீர்மானங்கள் இயற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் அதிமுகவில் சர்ச்சை ஓரளவுக்கு தீர்ந்துள்ளது என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கதையில சாவுன்னு இருந்தாலே என் பெயரை எழுதிடுறாங்க… மேடையில் கலகலப்பாக பேசிய கலையரசன்!

ஷங்கரின் கேம்சேஞ்சர் படத்தின் தமிழக விநியோக உரிமை இவ்வளவு கோடியா?

விரைவில் அமரன் படத்தின் 100 ஆவது நாள் விழா.. பிரம்மாண்டமாகக் கொண்டாட திட்டமிடும் கமல்ஹாசன்!

சிம்பு தேசிங் பெரியசாமி இணையும் படத்துக்கு விரைவில் டீசர் ஷூட்டிங்… வெளியான தகவல்!

விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கே இன்னும் சம்பள பாக்கி உள்ளதா?

அடுத்த கட்டுரையில்
Show comments