Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யாவை தாக்கினால் ஒரு லட்சம்: பாமகவுக்கு எதிராக We Stand With Suriya!!

Webdunia
திங்கள், 15 நவம்பர் 2021 (08:53 IST)
ட்விட்டரில் 'WeStandWithSuriya' என்ற ஹேஷ்டேக் சூர்யாவுக்கு ஆதரவாக மக்களால் டிரெண்டாகி வருகிறது. 

 
சூர்யா நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவான படம் ஜெய்பீம். ஓடிடியில் வெளியான இந்த படம் இருளர் பழங்குடி மக்களின் வாழ்வில் நடக்கும் துயரங்களை பதிவு செய்துள்ளதாக பரவலாக நல்ல பாராட்டையும் பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் கதை உண்மை சம்பவத்தை தழுவியது என்ற அடிப்படையில் சில சர்ச்சைகளையும் சந்தித்துள்ளது.
 
முக்கியமாக அதில் வில்லனாக வரும் போலீஸ் கதாபாத்திரம் வன்னியர் சமுதாயம் என்ற வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளதன் மேல் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஜெய்பீம் படத்தை முன்வைத்து சூர்யாவுக்கு பல கேள்விகளை எழுப்பியுள்ளார் பாமக எம்.பி அன்புமணி ராமதாஸ். இதற்கு நடிகர் சூர்யாவும் தனது தரப்பு விளக்கத்தை அளித்துவிட்டார்.
இதனிடையே மயிலாடுதுறையில் நடிகர் சூர்யா நடித்த வேல் திரைப்படம் திரையிடப்பட்டது. திரையரங்கிற்கு வந்த பாமகவினர் திரைப்பட காட்சியை நிறுத்த சொல்லி பிரச்சனை செய்தனர். அதோடுநடிகர் சூர்யாவிற்கு எதிராக பாமகவினர் முழக்கமிட்டு போஸ்டரை கிழித்தனர். 
 
மேலும் நடிகர் சூர்யா மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்தால் அவரை தாக்கும் இளைஞர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என மயிலாடுதுறை மாவட்ட பாமக சார்பில் அறிவிக்கப்பட்டது. இது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் 'WeStandWithSuriya' என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. மக்கள் பலர் சூர்யாவுக்கு ஆதரவாக இந்த ஹேஷ்டேக்கின் கீழ் பதிவிட்டு வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

தமிழன் இந்தியாவிற்கு தலைமை தாங்க வேண்டும்.. எந்த I.N.D.I.Aவை சொல்றார்! – இந்தியன் 2 பட விழாவில் கமல்ஹாசன்!

இசைஞானி பிறந்தநாள்: அசத்தல் போஸ்டரை வெளியிட்ட ‘இளையராஜா’ படக்குழு!

மகள் பவதாரணி மரணம்..! தனது பிறந்தநாளை புறக்கணித்த இளையராஜா..!!

அண்ணனுக்கும் பிறந்த நாள்.. தம்பிக்கும் பிறந்த நாள்.. இரட்டிப்பு சந்தோஷம்: கமல்ஹாசன்

நிவேதா பெத்துராஜ் வீடியோவின் மர்மம் இதுதான்.. இதுக்கு தானா இந்த அலப்பற..!

அடுத்த கட்டுரையில்
Show comments