Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அரசை நம்புகிறோம்: விஷால்

Webdunia
திங்கள், 2 ஏப்ரல் 2018 (17:52 IST)
திரையுலகினர்களின் வேலைநிறுத்தம் தொடங்கி சரியாக ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில் இன்னும் இந்த பிரச்சனை தீர்வதற்கான அறிகுறியே தெரியவில்லை .இந்த நிலையில்தான் விஷால் வேறு வழியில்லாமல் இந்த பிரச்சனையை அரசாங்கத்திடம் கொண்டு செல்வதாக அறிவித்தார். இந்த நிலையில் அரசாங்கம் தானாகவே முன்வந்து தமிழ் திரையுலகினர்களுக்காக தனி வாரியம் தேவைப்பட்டால் அமைக்கப்படும் என அறிவித்துள்ளது. இதனால் விஷால் உள்பட தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் அறிக்கை ஒன்றை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ் திரையுலகில் கடந்த ஒரு மாதமாக திரைப்படங்கள் எதுவும் வெளியிடாமலும், படப்பிடிப்புகள் மற்றும் சினிமா சம்பந்தமான எல்லா பணிகளையும் நிறுத்தி வைத்தும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தமிழ்த் திரை உலகத்துக்காக நலவாரியம் அமைக்கப்படும் என்று தமிழக செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் திரு.கடம்பூர் ராஜூ அவர்கள் அறிவித்துள்ளார். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றான திரைத்துறைக்கு தனி வாரியம் அமைக்கப்படும் என்று உறுதியளித்த செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் ராஜூ அவர்களுக்கும் தமிழக அரசுக்கும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்த்திரையுலகின் அனைவர் சார்பிலும் நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.

மேலும் திரைத்துறை சம்பந்தப்பட்ட அனைத்து கோரிக்கைகளையும் தமிழக அரசு விரைவில் நிறைவேற்றும் என நம்புகிறோம்' என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

அடுத்த கட்டுரையில்
Show comments