Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆயிரத்தில் ஒருவன் -2போஸ்டர் காப்பியடிக்கப்பட்டதா ? நெட்டிசன்கள் கேள்வி

Webdunia
சனி, 2 ஜனவரி 2021 (13:13 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநரும் தனுஷின் அண்ணனுமான செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் படத்தின்  இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளதாக தகவ தெரிவித்து, இதன் போஸ்டரை இன்று புத்தாண்டுப் பரிசாகத் தன் ரசிகர்களுக்கு விருந்துவைத்தார். ஆனால் இப்படத்தின் போஸ்டர் காப்பியடிக்கப்பட்டாதா ? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ’ஆயிரத்தில் ஒருவன்’. தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளிவந்த இந்தத் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. இதன் இரண்டாவது பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் அவரை நச்சரித்து வந்தனர்.

இந்நிலையில் 10 ஆண்டுகள் கழித்து ’ஆயிரத்தில் ஒருவன் 2’ படத்தின் அறிவிப்பு நேற்று வெளியாகியுள்ளது. இயக்குனர் செல்வராகவன் தனது டுவிட்டர் பக்கத்தில் ’ஆயிரத்தில் ஒருவன்’ இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறார்.

இதில் தான் பிரச்சனையே ஆரம்பமாகியுள்ளது. செல்வராகவன் வெளியிட்டுள்ள ஆயிரத்தில் ஒருவர் -2 பாகம் படத்தின் போஸ்டர் Mathieu lauffray என்ற புத்தகத்தின் அட்டைப்படம் போன்று இருப்பதாக நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் இப்படமும் இப்புத்தகத்தின் பாதிப்பிலிருந்து கதை வருமா எனவும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வரும் நிலையில் செல்வராகவன் புத்தகப் பிரியர் என்பதால் அவர் Mathieu lauffray என்ற புத்தகத்தை முன்மாதிரியாகவும் இன்ஸ்பிரேசனாகவும் வைத்து ஆயிரத்தில் ஒருவர் -2 பாகம் படத்தின் போஸ்டரை வெளியிட்டிருக்கலாம் என அவருக்கு ஆதரவாகக் கருத்து தெரிவிது வருகின்றனர்.

ஆயிரத்தின் ஒருவன் படத்தில் முதல் பாகத்தில் கார்த்தி, பார்த்திபன், ரியாசென், ஆண்ட்ரியா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்த நிலையில் இரண்டாம் பாகத்தில் கார்த்திக்கு பதிலாக தனுஷ் நடிக்க இருப்பதாக அவர் அறிவித்துள்ளார். மேலும் மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் இந்த படம் 2024 ஆம் ஆண்டு வெளிவரும் எனச் செல்வராகவன்  கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பா விஜய் இயக்கத்தில் ஜீவா, அர்ஜுன் நடிக்கும் ‘அகத்தியா’ .. கவனம் ஈர்க்கும் மிரட்டலான டிசர்!

சசிகுமார் & சிம்ரன் நடிக்கும் ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

அடுத்தது வேள்பாரிதான்.. இயக்குனர் ஷங்கர் கொடுத்த அப்டேட்!

5 பாட்டிருக்கி… 75 கோடி செலவு செஞ்சிருக்கி… கேம்சேஞ்சர் தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்!

சென்சார் செய்யப்பட்ட விடாமுயற்சி திரைப்படம்.. யாரெல்லாம் பார்க்கலாம்?

அடுத்த கட்டுரையில்
Show comments