Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூத்தாடி என்று சொன்னவருக்கு பதில் கூறிய விவேக்- ரசிகர்கள் ஆதரவு!

Webdunia
வெள்ளி, 29 ஜனவரி 2021 (17:20 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான விவேக்கை சீண்டிய நபர் ஒருவருக்கு அவர் சமூகவலைதளத்தில் பதிலடிக் கொடுத்துள்ளார்.

முன்னணி நகைச்சுவை நடிகரான விவேக், சமூகவலைதளங்களில் இப்போது மிகவும் தீவிரமாக இயங்கி வருகிறார். அதையொட்டி ரசிகர்களுடன் அவ்வப்போது உரையாடலும் நடத்தி வருகிறார். அப்படி ஒரு நிகழ்வின் போது நடிகர்களைக் கூத்தாடி என்றும் இழிவுபடுத்தும் நோக்கிலும் வடிவேலுவின் புகைப்படத்தை டிபியாக வைத்திருந்த நபர் பேசிய போது அவருக்கு நறுக்கென்று பதிலளித்துள்ளார் விவேக்.

அவரது பதிலில் ‘கூத்தாடி என்று சொல்லிவிட்டு எங்கள் குடும்பத்தில் ஒருவரின் புகைப்படத்தை ஏன் டிபியாக வைத்துள்ளீர்கள்? என கேள்வி கேட்டுள்ளார். மேலும் கூத்தாடி என்று சொல்வதால் நாங்கள் தாழ்ந்து விடுவதில்லை, பெருமை தான். சிவனே மன்றில் ஆடுவது கூத்துதானே!’ எனக் கூறியுள்ளார். விவேக்கின் இந்த பதிலுக்கு ரசிகர்களிடம் இருந்து ஆதரவு பெருகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஸ்டன்னிங்கான போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

மஞ்சள் நிறமே… மஞ்சள் நிறமே… மாளவிகாவின் கலர்ஃபுல் போட்டோஸ்!

வார இறுதி நாட்களில் பிக்கப் ஆகும் பாலாவின் ‘வணங்கான்’… டிக்கெட் புக்கிங் அதிகரிப்பு!

என் படங்கள் சரியாக ஓடவில்லை… ஆனால் தவறு என்னுடையது இல்லை –ஜெயம் ரவி ஓபன் டாக்!

அதர்வாவின் ‘DNA’ படத்துக்கு ஐந்து இசையமைப்பாளர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments