Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஸ்வாசம் கதை இதுதான்! சூப்பர் தகவல்

Webdunia
செவ்வாய், 1 ஜனவரி 2019 (18:37 IST)
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடித்துள்ள படம் விஸ்வாசம். டிரைலர் சமீபத்தில் வெளியாகி யூடியூப் தளத்தில் டாப் டிரெண்ட் ஆக இன்றும் இருந்தது. 
 
அஜித் படத்துக்கு போட்டியாக வரும் பேட்ட பட டிரெய்லர் மரணமாஸ் என்றால், விஸ்வாசம் நிச்சயம் கொலமாஸ் தான். இதுதான் கதையான ரசிகர்களின் இதயத்தை எக்குதப்பாக எகிற வைத்துவிட்டது. 
 
சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். விஸ்வாசம் கதை என்னவாக இருக்கும் என மொத்த கோலிவுட் தளங்களும் சல்லடை போட்டு தேடியதில், சூப்பராக சிக்கியது விஸ்வாசம் கதை. 
 
தேனியில் பெரிய தாதா அஜீத். வெட்டி வம்புக்குப் போகாமலும் அதே நேரத்தில் வந்த சண்டையை விடாமலும் இருக்கிறார். அவருக்கு மனைவியின் பிரசவ நேரத்தில் கூட அருகில் இருக்க முடியாதளவுக்கு சூழல் வருகிறது. என்ன? தவிர்க்க முடியாமல் ஒரு சண்டை வருகிறது. அடித்து துவைத்துவிட்டு மருத்துவமனை வருவதற்குள் அத்தனை மகழ்ச்சிக்கும் என்டு கார்டு விழுகிறது.
 
பிரசவத்தில் குழந்தை இறந்துவிடுகிறது. கண்கலங்கும் நயன்தாரா அஜீத்தை பிரிந்து எங்கோ சென்று விடுகிறார். மனைவியை மீண்டும் 12 வருஷம் கழித்து மும்பையில் சந்திக்கும் அஜீத், இறந்து போய்விட்டதாக கூறப்பட்ட பெண் குழந்தை உயிரோடு இருப்பதை கண்டு சந்தோஷப்படுகிறார்.
 
விளையாட்டில் சுட்டியாக இருக்கும் மகள், பெரிய காம்படிஷனில் கலந்து கொள்கிற சூழலில் வில்லனின் மகளும் அதே கேம்-ல் போட்டி மாணவியாக களம் இறங்குகிறார். வேறு வழியில்லை. அஜீத் மகளை கொன்றுவிட்டால் தன் மகளுக்கு வெற்றி உறுதி என்று நினைக்கும் வில்லன் அதற்கு முயல, அப்பா அஜீத் என்ன செய்தார் என்பதுதான் க்ளைமாக்ஸ்.
 
இதில் சிவா இயக்கம் எப்படி இருக்கும் என்பதை பொங்கல் சமயத்தில் தெரிந்து கொள்ளலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டி.ராஜேந்தர் வாய் இசையில் ‘கூலி’ படத்தில் பாடல்? - சர்ப்ரைஸ் கொடுத்த ப்ரோமோ வீடியோ!

விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?

முஃபாசா படத்துக்கு பூனைக்குட்டியா? மகேஷ் பாபு ரசிகர்கள் அட்டகாசம்!

கடைசி நேரத்தில் விடாமுயற்சி படத்தில் இணைந்த பிரபலம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியது கண்டனத்துக்குரியது: இயக்குனர் வெற்றிமாறன்

அடுத்த கட்டுரையில்
Show comments