Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜப்பானில் வெளியாகும் விஸ்வாசம்!

Webdunia
திங்கள், 31 டிசம்பர் 2018 (17:45 IST)
ரஷ்யா மற்றும் உக்ரைனைத் தொடர்ந்து விஸ்வாசம் படம் ஜப்பானிலும் வெளியாக உள்ளது.


 
செவன்த் சென்ஸ் சினிமாட்டிக்ஸ் நிறுவனம் வெளியிடுவதாக அறிவித்திருக்கிறது
 
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடித்துள்ள படம் விஸ்வாசம், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படம் வரும் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்த படத்துக்கு டி. இமான் இசையமைத்துள்ளார். பாடல்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டாகி விட்டது. டிரெய்லர் நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேட்ட பட டிரெய்லர் சாதனையை சில மணி நேரத்திலேயே சாதனை படைத்தது.  பேட்ட படத்தில் ரஜினி பேசும் எவனுக்காவது பொண்டாட்டி புள்ள பாசம் இருந்தா ஓடிடு, கொலை காண்டுல இருக்கேன் என்ற வசனத்துக்கு பதில்  அளிக்கும் விதமாக , அஜித்,, “உங்க மேல கொல கோவம் வரணும், ஆனா உங்கள எனக்கு பிடிச்சிருக்கு சார், பேரு தூக்குதுரை, தேனி மாவட்டம் ஊரு கொடுவிளார்பட்டி, பொண்டாட்டி பேர் நிரஞ்சனா, பொண்ணு பேர் ஸ்வேதா, ஒத்தைக்கு ஒத்த வாடா” என்ற வசனத்தை பேசியிருப்பார். இதனை ரஜினிக்கு போட்டியாக பேசியதாக அஜித் ரசிகர்கள்  எண்ணிக்கொண்டு கொண்டாடி வருகிறார்கள். இதனால் பேட்ட, விஸ்வாசம் வெளியாகும் நாள் அன்று நிச்சயம் பரபரப்பு காணப்படும்.
 
இந்நிலையில் இந்த நிலையில் விஸ்வாசம் ஜப்பானில் ரிலீசாவது உறுதியாகியுள்ளது. ஸ்பேஸ் பாக்ஸ் என்ற நிறுவனம் ஜப்பானில் விஸ்வாசத்தை வெளியிடுகிறது. இதுகுறித்த அறிவிப்பை அந்நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. முன்னதாக ரஷ்யா மற்றும் உக்ரைனில் விஸ்வாசம் படத்தை செவன்த் சென்ஸ் சினிமாட்டிக்ஸ் நிறுவனம் வெளியிடுவதாக அறிவித்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நெரிசலில் காயம் அடைந்த சிறுவனுக்கு ரூ.2 கோடி.. அல்லு அர்ஜூன் தந்தை அறிவிப்பு..!

’தமிழ்ப்படம் 3’ படத்தின் அப்டேட் கொடுத்த சிவா.. எப்போது படப்பிடிப்பு?

க்ரீத்தி ஷெட்டியின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்கள்!

96 புகழ் கௌரி கிஷனின் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

பாடல்களுக்கு மட்டும் சுமார் 95 கோடி ரூபாய்.. கேம் சேஞ்சர் படம் பற்றி ஆச்சர்யத் தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments