Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷ்ணு விஷால் படத்தை ரிலீஸ் செய்யும் உதயநிதி!

Webdunia
திங்கள், 31 ஜனவரி 2022 (19:27 IST)
நடிகர் விஷால் நடித்த எப்.ஐ.ஆர் என்ற திரைப் படம் ரிலீசுக்கு தயாராக இருந்த நிலையில் இந்த திரைப்படத்தை ரிலீஸ் செய்ய உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் முன்வந்துள்ளது
 
விஷ்ணு விஷால் நடிப்பில் உருவான எப்.ஐ.ஆர் திரைப்படம் பிப்ரவரி 11ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதனை அடுத்து இந்நிறுவனம் இந்த படத்தின் புரமோஷன் பணிகளை தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ரெட் ஜெயிண்ட் மூவிஸ் இந்த படத்தை சிறப்பாக புரமோஷன் செய்யும் என்பதால் இந்த படம் வெற்றி அடைய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது
 
விஷ்ணு விஷால் ஜோடியாக ரெபா மோனிகா நடித்துள்ள இந்த படத்தில் மஞ்சிமா மோகன், கவுதம்மேனன்,  பிக்பாஸ் ரைசா வில்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  இந்த படத்தை மனு ஆனந்த் இயக்கி உள்ளார் என்பதும், அஸ்வத் இசை அமைத்துள்ளார் என்பதும்  குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் போலவே பெட்டியை தூக்கிட்டு கிளம்பும் ராஷ்மிகா மந்தனா.. தனுஷ் படத்தின் அப்டேட்..!

63 வயது பிரபல நடிகரின் மனைவியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. வைரல் புகைப்படம்..!

ஹோம்லி ட்ரஸ்ஸில் ரைசா வில்சனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

கருப்பு நிற ட்ரஸ்ஸில் காஜல் அகர்வாலின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதி இல்லாமல் வெளியாகும் போஸ்டர்கள்… இதுதான் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments