Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷ்ணு விஷாலின் அடுத்த படம் ஓடிடியில் வெளி ஆகிறதா?

Webdunia
திங்கள், 1 நவம்பர் 2021 (11:44 IST)
விஷ்ணு விஷால் நடித்து எஃப் ஐ ஆர் திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

விஷ்ணு விஷால் நடிப்பில் மனு ஆனந்த் இயக்கும் எஃப் ஐ ஆர் படம் பற்றிய அறிவிப்புகள் சில ஆண்டுகளுக்கு முன்னரே வெளியாகின. ஆனால் கொரோனா மற்றும் இதர பிரச்சனைகள் காரணமாக அந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான விஷ்ணு விஷால் படம் பற்றி சில மாதங்களுக்கு முன்னர் டிவிட்டரில் ‘படத்தின் முதல் காப்பி முடிந்துவிட்டது. திரையிட்டுக் காட்டியவர்கள் எல்லாம் நல்ல விமர்சனங்களைக் கொடுத்துள்ளனர். நடிகராகவும், தயாரிப்பாளராகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். உங்களிடம் எங்கள் பயணத்தைக் காட்ட ஆர்வமாக இருக்கிறோம். விரைவில் அறிவிப்புகள் வரும்’ எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் இப்போது இந்த திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதை தயாரிப்பாளரான விஷ்ணு விஷால் மறுத்துள்ளார். மேலும் ‘ஓடிடியில் படம் நேரடியாக வெளியாவதாக வந்த அறிவிப்பு தவறானது. ஒரு தயாரிப்பாளராக நான் திரையரங்கில் படத்தைக் கொண்டுவர என்னால் ஆன முயற்சியை மேற்கொண்டு வருகிறேன். மிகச்சிறந்த திரையரங்க அனுபவத்துக்காகவே இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’விடாமுயற்சி’ ரிலீஸ் தேதியை உறுதி செய்த லைகா.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

நான் எழுதிய கதைகளில் விஜயகாந்த் வில்லன்… இயக்குனர் பா ரஞ்சித் பகிர்ந்த தகவல்!

நடிகை ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் வைரல் ஃபோட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டன்னிங் லுக்கில் கலக்கலான ஃபோட்டோஷூட் நடத்திய பூனம் பாஜ்வா!

பிரபாஸ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் நயன்தாரா!

அடுத்த கட்டுரையில்
Show comments