Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்: விஷால் வெற்றி

Webdunia
ஞாயிறு, 2 ஏப்ரல் 2017 (19:52 IST)
திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷால் வெற்றிப்பெற்று தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய தலைவராகிறார்.


 

 
இன்று காலை 8 மணி முதல் ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரனின் கண்காணிப்பில் சென்னையிலுள்ள அண்ணா நகர் கந்தசாமி நாயுடு கல்லூரி வளாகத்தில் வாக்குப்பதிவு நடந்தது.
 
இந்த தேர்தலில் தாணு அணி, எஸ்.ஏ.சந்திரசேகர் அணி, விஷால் அணி என மூன்று அணிகள் போட்டியிட்டனர். தலைவர், துணைத்தலைவர் , செயலாளர், பொருளார் உட்பட 27 பதவிகளுக்கு நடைப்பெற்ற இந்த தேர்தல் முடிவு இன்னும் சற்று நேரத்தில் வெளியாக உள்ளது. 
 
இந்நிலையில் விஷால் அணியினர் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். அவர்கள் விஷால் 150 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றதாக தெரிவித்துள்ளனர்.
 
தென்னிந்திய நடிகர் சங்க செயலாளராக இருக்கும் விஷால் இன்று நடைப்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் 150 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் தயாரிப்பாளர் சங்கத் தலைவராகிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’சர்தார் 2’ படத்தின் 3 நிமிட வீடியோ.. மாஸ் ஆக்சன் காட்சிகள்..!

’மேலிடத்து உத்தரவு’.. தனுஷுக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட ஃபைவ் ஸ்டார் நிறுவனம்..!

கிளாமர் இளவரசி ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் ஆல்பம்!

குக் வித் கோமாளி சீசன் 6 எப்போது? புதிய கோமாளிகள் பங்கேற்பார்களா?

கிளாமர் இளவரசி ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments