Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துப்பறிவாளன் படத்தில் விஷாலுக்கு தொப்பி வைத்தது ஏன்?... இயக்குனர் மிஷ்கின் கொடுத்த விளக்கம்!

Webdunia
வியாழன், 25 மே 2023 (11:32 IST)
விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கிய துப்பறிவாளன் திரைப்படம் விஷாலுக்கு அவரின் வெற்றிப் பட வரிசையில் ஒன்றாக அமைந்தது. இந்த படத்தில் விஷாலின் தோற்றம் மற்றும் லுக் கவனத்தை ஈர்த்தது. இதனால் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை சில ஆண்டுகளுக்கு முன்னர்  அதே கூட்டணியில் தொடங்கினர்.

’துப்பறிவாளன் 2’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென விஷால் மற்றும் மிஷ்கின் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மிஷ்கின் படத்தில் இருந்து விலகினார். லண்டனில் நடந்த படப்பிடிப்பில் இருவருக்கும் இடையே எழுந்த கருத்து வேறுபாட்டால் இந்த படத்தில் இருந்து மிஷ்கின் விலகினார். மேற்கொண்டு படத்தை விஷாலே இயக்குவார் என அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் அந்த படம் அடுத்த கட்டம் நோக்கி நகரவில்லை.

இந்நிலையில் இப்போது மிஷ்கின் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசும்போது துப்பறிவாளன் படத்தில் விஷாலுக்கு ஏன் தொப்பி வைத்தேன் என்பது பற்றி பேசியுள்ளார். பழம்பெரும் இயக்குனர் TN பாலு இயக்கத்தில் உருவான சங்கர்லால் வகை படங்கள் தனக்கு பிடிக்கும் என்பதால் அதன் நினைவாகதான் துப்பறிவாளன் படத்தில் விஷாலுக்கு தொப்பி வைத்து எடுத்தேன் எனக் கூறியுள்ளார். 
 

தொடர்புடைய செய்திகள்

கோட் படத்தின் சேட்டிலைட் பிஸ்னஸில் சொதப்பிய தயாரிப்பு நிறுவனம்… 30 கோடி நஷ்டம்?

தென்காசியில் தொடங்கிய விடுதலை 2 ஷூட்டிங்!

படை தலைவன் படத்துக்குப் பிறகு பிரபல இயக்குனர் படத்தில் சண்முக பாண்டியன்!

அஜித் சிறுத்தை சிவா படத்தில் இருந்து வெளியேறுகிறதா சன் பிக்சர்ஸ்?

கைவிட்ட சூர்யா... விக்ரம் பக்கம் செல்லும் சுதா கொங்கரா!

அடுத்த கட்டுரையில்
Show comments