Webdunia - Bharat's app for daily news and videos

Install App

30 -ஆம் தேதி நடிகர் சங்க செயற்குழு கூட்டம் - கட்டம் கட்டப்படுவாரா விஷால்?

Webdunia
சனி, 22 நவம்பர் 2014 (19:47 IST)
நடிகர் சங்கப் பிரச்சனை விஸ்வரூபமெடுத்துள்ளது. ராதாரவியும், சங்கத்தின் துணைத்தலைவர் கே.என்.காளையும் விஷால், நாசர் உள்ளிட்டவர்களை நாய்கள் என்று திட்டிபோதே சங்கத்தின் சுவர்களில் சூடேற ஆரம்பித்தது.

உறுப்பினர்களின் வற்புறுத்துதலுக்குப் பிறகு ராதாரவி, காளை இருவருக்கும் விளக்கம் கேட்டு சங்கத் தலைவர் சரத்குமார் நோட்டீஸ் அனுப்பினார். அதுபற்றி மீடியாவிடம் வாய் திறக்காதவர், சங்கத்தைப் பற்றி தொடர்ந்து அவதூறாக பேசி வந்தால் விஷாலை சங்கத்தைவிட்டே நீக்குவோம் என்றார்.

யாரோ இருமியதற்கு நான் ஏன் கஷாயம் குடிக்க வேண்டும்? அவர்கள் மேல் நடவடிக்கை எடுப்பதைவிட்டு என்னை சங்கத்திலிருந்து நீக்கிவிடுவதாக சொல்வது என்ன நியாயம்? அதற்கு ஏதாவது காரணம் சொல்ல முடியுமா? வர்ற தேர்தலில் நான் மட்டுமில்லை நாசர், ராஜேஷ் போன்ற சீனியர் நடிகர்களும் தேர்தலில் நிர்ப்பார்கள் என விஷால் முஷ்டி மடக்கினார்.

இந்நிலையில் வரும் 30-ஆம் தேதி சங்கத்தின் செயற்குழு கூடுகிறது. இதில் விஷாலுக்கு எதிராக விஸ்தீரணமாக பேசப்படும் என எதிர்பார்க்கப்படுவதால் கோடம்பாக்கம் வேடிக்கைப் பார்க்கும் மனநிலைக்கு வந்துள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் விஜய் ஆண்டனியின் 'மழை பிடிக்காத மனிதன்' படம் ‘யு/ஏ’ சான்றிதழ் பெற்றுள்ளது!

ஆங்கிலத்தில் ஏ ஐ தொழில்நுட்பம் மூலமாக டப் ஆகும் சிம்புவின் சூப்பர் ஹிட் திரைப்படம்!

நேர்காணல் கேட்ட சன் டிவி… நோ சொன்ன விஜய்- இதனால்தான் கோட் வியாபாரம் கைமாறியதா?

தசாவதாரம் படத்தில் தான் செய்த சாதனையை இந்தியனில் முறியடிக்கும் கமல்ஹாசன்!

ரகுல் ப்ரீத் சிங்கின் கணவருக்கு 250 கோடி ரூபாய் நஷ்டம்.. சொத்துகளை விற்ற சோகம்!

Show comments