Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாயும் புலி - மீண்டும் ரஜினி படப் பெயரை கைப்பற்றிய விஷால்

Webdunia
வியாழன், 26 மார்ச் 2015 (13:05 IST)
சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் படத்துக்கு, சாகித்ய அகதாமி விருது பெற்ற சு.வெங்கடேசனின், காவல் கோட்டம் நாவலின் பெயரை வைத்திருப்பதாக சென்ற வாரம் செய்தி வெளியானது. ஆனால், படத்தின் பெயர் காவல் கோட்டம் கிடையாது என்றும், பாயும் புலி என பெயர் வைத்திருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
 
பாயும் புலி ரஜினி நடித்த பழைய படத்தின் பெயர். ஏற்கனவே தான் தயாரித்து நடித்த படத்துக்கு, நான் சிவப்பு மனிதன் என்று ரஜினி படத்தின் பெயரை வைத்தார் விஷால். இப்போது இரண்டாவது முறையாக ரஜினி படப்பெயரை தனது படத்துக்கு வைத்துள்ளார்.
 
காஜல் அகர்வால் ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமுத்திரகனி விஷாலின் அண்ணனாக நடிக்கிறார். படத்தை வேந்தர் மூவிஸ் தயாரிக்கிறது.

LUC பற்றிய டாக்குமெண்ட்ரி எடுக்கும் லோகேஷ் கனகராஜ்… டைட்டில் இதுதான்!

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

Show comments