Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷூட்டிங்குக்கே வராத விஷால்… எனிமி படக்குழு அப்செட்!

Webdunia
திங்கள், 12 ஜூலை 2021 (10:09 IST)
விஷால் நடிப்பில் உருவாகும் எனிமி படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது.

இயக்குனர் பாலாவின் ‘அவன் இவன்’ படத்தில் சேர்ந்து நடித்த விஷால் – ஆர்யா நீண்ட ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒன்றிணையும் படம் ‘எனிமி’. ஆனந்த ஷங்கர் இயக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். நீண்ட ஆண்டுகள் கழித்து இருவரும் இணையும் படம் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தில் ஆர்யா வில்லனாக நடிப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில் கடைசிகட்ட படப்பிடிப்பு இப்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது. படத்தில் தான் சம்மந்தப்பட்ட காட்சிகளை ஆர்யா நடித்துக் கொடுத்து விட்டு சென்றுள்ளார். இப்போது விஷால் காட்சிகள் படமாக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த சில நாட்களாக விஷால் படப்பிடிப்பு தளத்துக்கு வரவே இல்லையாம். இது ஏனென்று தெரியாமல் படக்குழுவினர் இப்போது கையை பிசைத்துக் கொண்டு இருக்கின்றனராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

என் அடுத்த படத்தில் சூர்யா நடிக்கிறார்… உறுதி செய்த பாலிவுட் இயக்குனர்!

என் அடுத்த படத்தில் சூர்யா நடிக்கிறார்… உறுதி செய்த பாலிவுட் இயக்குனர்!

ரஜினியின் வேட்டையன் படத்துக்கான முன்பதிவு தொடங்கியது!

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் 15 போட்டியாளர்கள் இவர்கள் தான்.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments