Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷால் 34 படத்தின் டைட்டில் இதுதானா..? வெளியான தகவல்!

Webdunia
செவ்வாய், 28 நவம்பர் 2023 (07:11 IST)
தமிழ் சினிமாவின் கமர்ஷியல் இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் ஹரி. அவர் இயக்கிய சாமி, ஆறு, சிங்கம் உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்றவை. சமீபத்தில் அவர் அருண் விஜய் நடிப்பில் உருவான யானை திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் பெரியளவில் வெற்றி பெறவில்லை. இதற்கு அடுத்து ஹரி தற்போது விஷால் நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களுக்குப் பிறகு இருவரும் மூன்றாவது முறையாக இந்த படத்தில் இணைகின்றனர். கார்த்திக் சுப்பராஜ் தயாரிக்கும் இந்த படத்தை குறுகிய காலத்தில் படப்பிடிப்பு நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளது படக்குழு. திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் ஷூட்டிங் அடுத்தடுத்து நடந்து வந்தது. படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்க, யோகி பாபு நகைச்சுவை வேடத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு டிசம்பர் 1 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ள நிலையில் படத்துக்கு “பரிசு” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments