Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வில்லன் நடிகர் ரயிலில் இருந்து தள்ளி கொல்ல முயற்சித்தார்- ரஜினி பட நடிகை

Webdunia
புதன், 15 பிப்ரவரி 2023 (17:02 IST)
மலையாள சினிமாவின் பிரபல நடிகை  அஞ்சலி நாயர், தன்னை ஒரு வில்லன் நடிகர் ரயிலில் தள்ளி கொல்ல முயற்சித்த்தாக கூறி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் அஞ்சலி நாயர். இவர், தமிழ் சினிமாவில் ரஜினிகாந்துடன் அண்ணாத்த, விஜய் சேதுபதியுடன் மாமனிதன், நெல்லு,  உன்னையே காதலிப்பேன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவர், கடந்த 2011 ஆம் ஆண்டு அனீஷ் என்பவரை திருமணம் செய்த நிலையில், அவரிடமிருந்து விவாகரத்து பெற்றார்.

அதன்பின்னர், 2022 ஆம் ஆண்டு உதவி இயக்குனரை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், தமிழ் சினிமாவில் நான் நடித்தபோது, ஒரு வில்லன் நடிகர் என்னிடம் தவறாக நடக்க முயன்றார்.  அவரே அப்படத்தின் தயாரிப்பாளரும் ஆவார். அதனால் ஷூட்டிங் இல்லாத போது, என்னை வெளியே செல்ல விடாமல் தொல்லை செய்ததுடன் எனக்கு புரபோஸ் செய்து, போன் செய்தார்.

இதை நான் ஏற்காதபோது என்னை ரயிலில் இருந்து தள்ளிக் கோல்ல முயற்சித்தார்; அதன் பிறகு நான் போலீஸில் புகார் செய்துவிட்டு கேரளாவுக்கு வந்துவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

நடிகை அஞ்சலி நாயர் கூறியுள்ளது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆங்கிலத்தில் ஏ ஐ தொழில்நுட்பம் மூலமாக டப் ஆகும் சிம்புவின் சூப்பர் ஹிட் திரைப்படம்!

நேர்காணல் கேட்ட சன் டிவி… நோ சொன்ன விஜய்- இதனால்தான் கோட் வியாபாரம் கைமாறியதா?

தசாவதாரம் படத்தில் தான் செய்த சாதனையை இந்தியனில் முறியடிக்கும் கமல்ஹாசன்!

ரகுல் ப்ரீத் சிங்கின் கணவருக்கு 250 கோடி ரூபாய் நஷ்டம்.. சொத்துகளை விற்ற சோகம்!

கங்கனா நடித்த எமர்ஜென்ஸி படத்தின் புது ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments